சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு: ரூமியின் பிணை மனு வாபஸ்

0 706

சர்ச்­சைக்­கு­ரிய வெள்ளை வேன் ஊடக சந்­திப்பு தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு­ப­கு­தி­யாக அரச மருந்­தாக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில்  அவ­ருக்குப் பிணை கோரி நேற்று முற்­பகல் தாக்கல் செய்­யப்­பட்ட இடை­யீட்டு மனு ஒரு மணி நேரத்­துக்குள் மீளப் பெறப்­பட்­ட­துள்­ளது.

சந்­தேக நபர் ரூமி மொஹ­மடின் சட்­டத்­த­ர­ணி­களே நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் இந்த இடை­யீட்டு மனுவை தாக்கல் செய்­த­பின்னர் அகற்­றிக்­கொண்­டுள்­ளனர்.

நேற்­றைய தினம் இந்தப் பிணைக் கோரிய இடை­யீட்டு மனு தாக்கல் செய்­யப்­பட்ட பின்னர், அதனை அவ­தா­னித்­துள்ள பிர­தான நீதிவான், இன்று (நேற்று) பிடி­யா­ணையை மீளப்­பெறல் தொடர்­பி­லான இடை­யீட்டு மனுக்­களை மட்­டுமே ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், பிணை தொடர்­பி­லான விண்­ணப்­பத்தை குறித்த விவ­கா­ரத்தின் விசா­ரணைத் தினத்தில் முன்­வைக்­கு­மாறு சட்­டத்­த­ர­ணி­க­ளுக்குத் தெரி­வித்­துள்­ள­தை­ய­டுத்தே இந்த இடை­யீட்­டு­மனு மீளப் பெறப்­பட்­டுள்­ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வுடன் இணைந்து சர்ச்­சைக்­கு­ரிய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள முத­லி­ரண்டு சந்­தேக நபர்­க­ளுக்கும், அச்­சந்­திப்பில் கலந்­து­கொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபாவை ரூமி மொஹமட் வழங்­கி­ய­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அது­தொ­டர்பில் அவர் கடந்த 2019.12.31 ஆம் திகதி சி.ஐ.டி.யில் சர­ண­டைந்த பின்னர் கைது செய்­யப்­பட்டார்.

இந்­நி­லையில், அவரை எதிர்­வரும் 6 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு மேல­திக நீதிவான் சலனி பெரேரா உத்­த­ர­விட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் ரூமி மொஹமட் அதேதினம் மாலை மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.