விஜயதாசவின் தனி நபர் பிரேரணை: மஹிந்தவின் நிலைப்பாடு என்ன?

21,22 ஆம் திருத்தும் குறித்து கேள்வி எழுப்புகின்றது ஜே.வி.பி

0 783

அர­சியல் அமைப்பில் திருத்­தங்­களைக் கொண்­டு­வந்து நிறை­வேற்று ஜனா­தி­ப­தியை பலப்­ப­டுத்தும் விஜ­ய­தாச ராஜபக் ஷவின் தனி­நபர் பிரே­ரணை குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன? இது குறித்து பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் நிலைப்­பாடு என்ன என்­பதை அறி­விக்க வேண்டும் என ஜே.வி.பி தெரி­வித்­துள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான விஜித ஹேரத் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

சகல மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் கொண்ட பாரா­ளு­மன்­றத்தை இல்­லாது செய்­வதும் பிர­தம நீதி­ய­ரசர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலை­வரும் மற்றும் உயர் நீதி­மன்­றத்­தி­னதும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்­தி­னதும் ஏனைய ஒவ்­வொரு நீதி­ப­தியும் நிய­மிக்­கப்­படும் கார­ணியில் அர­சியல் அமைப்பு பேர­வையின் அனு­மதி இல்­லாது ஜனா­தி­ப­தி­யினால் நேர­டி­யாக நிய­மிக்­கப்­படல் வேண்டும் என்ற கார­ணி­களை கருத்தில் கொண்டு விஜ­ய­தாச ராஜபக் ஷ கொண்­டு­வந்­துள்ள தனி­நபர் பிரே­ரணை முற்று முழு­தாக ஜன­நா­யக விரோத பிரே­ர­ணை­யாகும். அர­சியல் அமைப்­பிற்­கான இரு­பத்­தோ­ரா­வது மற்றும் இரு­பத்­தி­ரண்­டா­வது திருத்­தங்­களை விஜ­ய­தாச ராஜபக் ஷ கொண்டு வரு­வ­தா­னது அவ­ரது அர­சியல் இருப்பை தக்­க­வைத்துக் கொள்ளும் நோக்­கத்தில் மட்­டு­மே­யாகும். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷவின் ஆத­ரவை பெற்­றுக்­கொண்டு அவரின் அனு­ம­தி­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் தேசியப் பட்­டியல் மூல­மா­க­வேனும் உள்­நு­ழைய வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த திருத்­தத்தை அவர் கொண்டு வரு­கின்றார். மாறாக எந்­த­வித நோக்­கமும் அவ­ருக்கு இல்லை.

21 ஆம் திருத்­த­மா­னது சர்வ மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் கொண்ட பாரா­ளு­மன்றம் ஒன்று உரு­வா­வதை தடுத்து இன­வாத அரா­ஜ­கத்­தன்­மையை உரு­வாக்கும் நோக்­கத்தில் செயற்­ப­டக்­கூ­டிய ஒன்­றாகும்.

இதில் சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­தி­த்­துவம் பாதிக்­கப்­படும்.

அதேபோல் 22 ஆம் திருத்­த­மா­னது பிர­தம நீதி­ய­ரசர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலை­வரும் மற்றும் உயர் நீதி­மன்­றத்­தி­னதும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்­தி­னதும் ஏனைய ஒவ்­வொரு நீதி­ப­தியும் நிய­மிக்­கப்­படும் கார­ணியில் அர­சியல் அமைப்பு பேர­வையின் அனு­மதி இல்­லாது ஜனா­தி­ப­தி­யினால் நேர­டி­யாக தீர்­மானம் எடுக்க வேண்­டி­ய­தாக அமையும். ஆனால் 19 ஆம் திருத்­தத்தில் அர­சியல் அமைப்பு பேரவை பல­ம­டைந்­துள்­ளது. இந்த 19 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வந்­ததும் விஜ­ய­தாச ராஜபக் ஷ தான். 20 ஆம் திருத்த சட்­டத்­தையும் அவரே ஆத­ரித்தார். அவ்­வாறு இருந்­தவர் இன்று முற்­று­மு­ழு­தாக மாறு­பட்ட நிலைப்­பாட்டில் மீண்டும் சர்­வா­தி­கார ஜனா­தி­பதி முறைமை ஒன்­றினை கொண்­டு­வரும் வகையில் 21,22 ஆம் திருத்­தங்­களை கொண்­டு­வ­ரு­கின்றார்.

இந்த பிரே­ர­ணை­யா­னது வெறு­மனே விஜ­ய­தாச ராஜபக் ஷ கொண்­டு­வரும் தனி­நபர் பிரே­ர­ணையா அல்­லது அர­சாங்கம் கொண்­டு­வரும் பிரே­ர­ணையா என்­பதை முதலில் அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும்.

அது­மட்­டு­மல்ல இந்த இரண்டு திருத்­தங்­களை பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவினால் ஏற்­று­கொள்ள முடி­யுமா முடி­யாதா என்ற தனது நிலைப்­பாட்டை முதலில் அவர் தெரிவிக்க வேண்டும். தவறான பிரேரணைகளை ஆதரித்து நாடு நாசமாகிய பின்னர் நாம் செய்தது தவறு, இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என தெரிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று இவ்வாறு கூறுவது பிரசித்தியான விடயமாக மாறிவிட்டது. ஆகவே இதையெல்லாம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.