ஹஜ் குழு இலங்கை யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையை நிச்சயம் வழங்கும்

பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா

0 660

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­தலின் பேரில் செயற்­படும் தேசிய ஹஜ் குழு இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிறந்த சேவையை வழங்கும் அமைப்­பாக செயல்­படும் என்று முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

ஹஜ் விவ­கா­ரங்கள் தொடர்­பாக கலந்­து­ர­டை­யாட சவூதி அரே­பி­யா­விற்கு விஜயம் செய்து நாடு திரும்­பிய இலங்கை ஹஜ்­கு­ழுவின் தலைவர் மர்ஜான் பழீல், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைஸர் முஸ்­தபா ஆகியோர் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகி­யோரை நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். இதனை தொடர்ந்து அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், ஹஜ் கமிட்டி ஒரு இலாப நோக்­கற்ற நிறு­வ­ன­மாக செயல்­பட வேண்டும் என்­பது பிர­த­மரின் விருப்­ப­மாகும். அதன் குறிக்கோள் சேவை மட்­டுமே. ஹஜ் கட­மைக்­காக சவூ­திக்கு செல்லும் இலங்­கை­யர்கள் குறைந்த கட்­ட­ணத்தில் பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யு­மான அனைத்து வச­தி­க­ளையும் இந்த குழு மேற்­கொள்ளும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது.

அத்­துடன் கடந்த ஆண்டு ஹஜ் கட­மையை மேற்­கொள்ள ஒவ்­வொரு யாத்­தி­ரி­க­ருக்கும் 7இலட்சம் ரூபா­வரை செல­வி­ட­வேண்­டிய நிலை இருந்­தது. யாத்­தி­ரி­கர்­களின் ஹஜ் விவ­கா­ரங்கள் இலங்கை அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

மேலும் தற்­போது பிர­த­மரின் கீழ் இருக்கும் மத விவ­கா­ரங்கள் விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­சரால் நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் குழு மூலம் ஹஜ் செயல்­திறன் எளி­தாக்­கப்­ப­டு­கி­றது. இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தொடர்­பான சேவை­களை திருப்­தி­க­ர­மாக நிர்­வ­கிப்­பதை உறுதி செய்­வ­தற்­கான ஒட்­டு­மொத்த பொறுப்­பையும் இந்த குழு ஏற்­றுக்­கொள்­கி­றது.

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்ட 2020 ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் குழுவில் முகம்­மது பளீல் மர்ஜான் அஸ்மி (தலைவர்), முகம்­மது அஹ்கம் சப்ரி உவைஸ், சையத் அஹமட் நகீப் மெள­லானா, எம்.ஜே.அஹமட் புவார்ட் மற்றும் தங்க உடையார் அப்துல் சத்தார் ஆகியோர் அங்­கத்­த­வர்­க­ளாக இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் 23 டிசம்பர் 2019 அன்று சவூதி ஜித்­தா­வுக்குச் சென்ற ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் சவூதி அர­சாங்­கத்தின் ஹஜ்­ஜுக்குப் பொறுப்பான அமைச்சருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் இம்முறை 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த வருடங்களில் கடைக்கப்பெற்ற 2,850 கோட்டாவை விட அதிக ஒதுக்கீடாகும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.