மன்னிப்பு மாற்றத்தைக் கொண்டுவருமா?

0 666

ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க எம்பி 2004 ஆம் ஆண்டு மகிந்த பிர­த­ம­ரா­வ­தற்கும் 2005 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யா­வ­தற்கும் பெரும்­ப­ணி­யாற்­றி­யவர். அவற்­றுக்­காக அவர் இப்­போது நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­யி­ருக்­கிறார். 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு வாகன விபத்தின் குற்­ற­வா­ளி­யாக இவர் தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின் பிணையில் வெளி­வந்த பிறகே இவ்­வாறு மன்­னிப்பு கோரி­யி­ருந்தார்.

நாம் சில தவ­று­களைச் செய்­தி­ருப்­பதால் நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கேட்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைக்க எமது ஜாதிக ஹெல உறு­ம­யவின் 9 பிக்கு எம்­பிக்கள் பெரும்­பான்­மையை வழங்கி அர­ச­மைக்க உதவி புரிந்­தி­ருந்­தார்கள்.

அப்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பு தனது சிரேஷ்ட தலை­வர்­களின் விருப்­பப்­படி லக் ஷ்மன் கதிர்­கா­ம­ரையே பிர­த­ம­ராக்கத் தீர்­மா­னித்­தி­ருந்­தது. அதைத்­த­டுத்து நாமும் எமது 9 தேரர்­களும் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க மூலம் மகிந்த ராஜபக் ஷவைப் பிர­த­ம­ராக்க வைத்தோம். அதற்­காக இப்­போது நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரு­கிறோம் என்றார்.

அதுபோல் 2005 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் மகிந்த ராஜ­பக் ஷ வெற்­றி­பெற ஜே.வி.பியோடு சேர்ந்து நாமும் பாடு­பட்டோம்.

எமது ஜாதிக ஹெல உறு­ம­யவைச் சேர்ந்த சில தேரர்கள் ரணி­லுக்கு ஆத­ர­வ­ளித்­த­போதும் கூட ஒரு தேசிய சம்­மே­ள­னத்தை அமைத்து மகிந்­தவை ஜனா­தி­ப­தி­யாக்க செயற்­பட்டோம். தற்­போது இவர் நாட்டைக் குடும்பச் சொத்­தாக மாற்ற நாம் இழைத்த அர­சியல் தவ­று­களே கார­ண­மாகும் எனவும் குறிப்­பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கூறி­ய­போது, அப்­போது லக் ஷ்மன் கதிர்­கா­மரே நாட்டின் அடுத்த பிர­த­ம­ராக இருக்கத் தகு­தி­யா­ன­வ­ராக இருந்­த­போதும் அவர் சிங்­கள பெளத்­த­ரல்­லா­ததால் மகா சங்­கத்­தி­ன­ரோடு சேர்ந்து மகிந்­தவைப் பிர­த­ம­ராக்­கு­மாறு நானே சந்­தி­ரிக்­கா­விடம் கோரி­யி­ருந்தேன். அதன்­ப­டியே மகிந்த பிர­த­ம­ரானார். இப்­போது அவரைச் சூழ­வி­ருக்கும் எவரும் அப்­போது அவ­ரோடு இருக்­க­வில்லை.

ஒரு­புறம் சமா­தானம் பேசப்­ப­டு­கையில் மறு­புறம் புலி­க­ளுக்குக் கப்பம் வழங்­கிய காலமும் இருந்­தது. எங்கோ இருந்­தோரே இப்­போது சேர்ந்­தி­ருக்­கின்­றனர். புலி­க­ளுக்குப் பணம் வழங்­கி­யோரே இன்று வீரர்­க­ளாகி விட்­டனர் எனவும் குறிப்­பிட்டார். அர­சி­யலில் சில தவ­று­களைச் செய்­த­தாக மனம் நொந்த இவர் அவற்றை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கிறார்.

இவர் பிக்­கு­களை அர­சி­ய­லுக்குள் கொண்டு வந்து எம்­பிக்­க­ளா­கி­யதன் விளை­வுகள் என்­னென்ன? 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்­ளியு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க தனது அர­சியல் அபி­லா­ஷை­க­ளுக்­காக மட்­டுமே பிக்­கு­களைப் பயன்­ப­டுத்­தினார். முடிவில் இரு பிக்­கு­க­ளா­லேயே அவர் கொல்­லப்­பட்டார். எனினும் 2004 ஆம் ஆண்டு பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க பெளத்த மத­சா­ச­னத்­தையும் பிக்­கு­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யதால் நாட்டின் வெளி­வி­வ­கா­ரமும் உள்­வி­வ­கா­ரமும் படு­பா­தா­ளத்தில் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது.

* பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவால் உணர்­வூட்­டப்­பட்ட பிக்­கு­களில் 9 பேர் எம்­பிக்­க­ளாக இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு பிக்கு அமைப்­பு­களும் உரு­வா­கின. பொது­ப­ல­சேனா, ராவ­ணா­ப­லய, சிங்­ஹலே பிவி­துரு, ஹெல உறு­மய போன்ற சில அமைப்­புக்கள் உரு­வா­கின.

* நாடு முழு­வதும் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­தோடு வர்த்­த­கங்கள் முடக்­கப்­பட்டு சொத்­துக்கள் அழிக்­கப்­பட்டு இஸ்லாம் கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்டு வர­லாறும் மறுக்­கப்­பட்­டது. இறு­தி­யா­கவே பேரு­வ­ளையும் அளுத்­க­மையும் தாக்­கப்­பட்­டன.

இவர் 2002 ஆம் ஆண்டு ஒலுவில் பிர­க­ட­னத்தில் முஸ்லிம் அலகு கரை­யோர மாவட்­டக்­கோ­ரிக்­கைக்குப் பிற­குதான் தனது கட்­சியை சங்கு அடை­யா­ளத்தில் 2004 ஆம் ஆண்டின் பொதுத்­தேர்­தலில் பிக்­கு­களை அபேட்­ச­கர்­க­ளாக்கிக் களத்தில் இறக்­கினார். இதில் 9 பிக்­குகள் எம்­பிக்­க­ளா­கினர். இவர்கள் மகிந்­தவைப் பிர­த­ம­ராக்­கி­ய­தோடு ஜே.வி.பி.யோடு சேர்ந்து ஜனா­தி­ப­தி­யு­மாக்­கி­னார்கள். இதில் மகாசங்­கத்­தி­னரின் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றி­ருந்­தார்கள்.

பிர­த­ம­ரா­கு­வ­தற்­கு­ரிய தகுதி லக் ஷ்மன் கதிர்­கா­ம­ருக்கு இருந்தும் கூட அவர் ஜன­நா­யக ரீதியில் தமிழ் ஆயு­தப்­போ­ரா­ளி­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச ஆத­ரவைப் பெற்று வழங்­கி­யி­ருந்தும் கூட பெளத்த சிங்­க­ள­வ­ரல்ல என்னும் ஒரே கார­ணத்­துக்­காக பிர­தமர் பதவி வழங்­கக்­கூ­டாது என இவ­ரது அமைப்பு முடிவு செய்­தி­ருக்­கி­றது. முடிவில் புலி­களின் தாக்­கு­தலால் லக் ஷ்மன் கதிர்­காமர் பலி­யானார்.

எனினும் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­க­வுக்கு இன வேறு­பாடு செய்­தது குறித்து வருந்­தவும் மன்­னிப்­பு­கோ­ரவும் 15 ஆண்­டுகள் கழிந்­தி­ருக்­கின்­றன.

2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக் ஷஜனா­தி­ப­தி­யாக ஆகு­வ­தற்கு இவ­ரது அமைப்பும் மகா­சங்­கத்­தி­னரும் ஜே.வி.பி.யும் ஒத்­து­ழைத்­த­தா­கவும் இவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். ஆக, இவர் மகிந்­த­வுக்கு வழங்­கிய ஒத்­து­ழைப்பு 2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்­டு­வரை 11 ஆண்­டுகள் நீடித்­தி­ருந்­தன.

பேரி­ன­வாத ரீதியில் இவர் எழு­திய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அல்­ஜிஹாத் அல்­கைதா என்னும் சிங்­கள நூலே சிங்­கள மக்­க­ளிடம் துவே­ஷத்தை உரு­வாக்­கி­யது. முஹம்மத் பின் காஸிம் இந்­தி­யா­வுக்குப் படை­யெ­டுத்து வந்து நாலந்தா என்னும் பெளத்த சர்­வ­க­லா­சா­லையை அழித்­த­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­கான பெளத்­தர்­களைக் கொன்­ற­தா­கவும் ஆயி­ரக்­க­ணக்­காக பெளத்­தர்­களை சிறை­பி­டித்­த­தா­கவும் இவர் எழு­தி­யி­ருந்தார்.

சிங்­கள பெளத்­தரே பூமி புத்­தி­ரர்கள் மற்றோர் விதே­சிகள் முஸ்­லிம்கள் பிழைக்க வந்தோர் இவர்­களின் சனத்­தொகை பல்கிப் பெருகி வரு­கி­றது. எதிர்­கா­லத்தில் இலங்­கையின் சனத்­தொ­கையில் முஸ்­லிம்­களே கூடு­த­லாக இருப்­பார்கள். முஸ்­லிம்­களின் பிறப்பு விகிதம் அதிகம். முஸ்­லிம்­க­ளி­டமே பொரு­ளா­தாரம் அதிக அளவு தங்­கி­யி­ருக்­கி­றது என்னும் கருத்­துக்­களை இவர் முன்­வைத்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி அக்­க­ரைப்­பற்றைத் தாக்­கி­யதால் வீடி­ழந்­தோ­ருக்­கென சவூ­திய

அரசு வச­தி­யான 500 வீடு­களைக் கட்டிக் கொடுத்­தி­ருந்­தது. அவை தீக­வாபி என்னும் பெளத்த புண்­ணிய தலத்­துக்கு அருகே இருப்­ப­தா­கக்­கூறி முஸ்­லிம்­க­ளுக்கு முழு­மை­யாக வழங்­கக்­கூ­டாது என பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க வழக்­காடி வென்­றதால் அவ்­வீ­டுகள் இது­வரை யாருக்­குமே வழங்­கப்­ப­டாது பற்­றைக்­கா­டு­க­ளாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. கட்­டிக்­கொ­டுத்­த­வரின் விருப்­ப­மல்ல, மத­மே­லா­திக்­கமே இவ­ரது நோக்­க­மாக இருந்­தி­ருக்­கி­றது.

சமா­தா­னத்­துக்குப் போகா­த­வாறு பாது­காப்­புத்­து­றையை யுத்­தத்­துக்குத் தூண்டி உள்­நாட்டு சர்­வ­தேசப் பிடி­களில் மகிந்த ராஜபக் ஷ சிக்­கிய நேரம் பார்த்து மகிந்த ராஜ­பக்­ ஷ தீர்க்­க­மான தேர்தல் களத்தில் இறங்­கி­யி­ருக்­கையில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க புதி­ய­தொரு ஒப்­பந்­தத்­துக்கு அவரை அழைத்­தி­ருந்தார். இத்­தனை காலமும் உட­னி­ருந்து ஒத்­து­ழைத்து விட்டு சிக்கல் நேரம் பார்த்து எதி­லுமே சம்­பந்­தப்­ப­டாத புதிய ஆளைப்போல் ஒப்­பந்­தத்­துக்கு அழைத்தால் எப்­படி? தனது நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப எல்­லா­வற்­றிலும் பயன்­ப­டுத்தி விட்டு ஒன்­றி­லுமே சம்­பந்­தப்­ப­டாத அந்­நி­ய­னைப்போல் வந்தால் எப்­படி இதிலும் என்ன நிகழ்ச்சி நிரல் இருக்­குமோ என்னும் அச்சம் ஏற்­ப­டாதா எனினும் ரணில் மகிந்­தவைத் தோற்­க­டிக்க வேண்டும் என்னும் நோக்கில் அதில் ஒப்­ப­மிட்­டு­விட்டார். அதன் பிறகு மைத்­திரி ரணில் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பல மடங்கு அழி­வு­களைச் சந்­தித்­தனர்.

ரணில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருக்­க­வில்லை. சமா­ளிக்கும் நிலை­யி­லேயே இருந்தார். வடக்கு கிழக்கு தமிழர் விட­யத்­திலும் நழுவல் போக்­கையே கையாண்டார். எனினும் கூட சிறு­பான்­மைகள் அவரை நம்­பிக்­கொண்­டி­ருந்­தனர்.

வடக்கு கிழக்­குக்கு யுத்த முனைப்பைத் தூண்­டிய பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க அழி­வுக்­குள்­ளான தமிழர் மீது இது­வரை எந்த அக்­க­றையும் காட்­ட­வில்லை.

முஸ்­லிம்கள் பர­வ­லாகத் தாக்­கப்­ப­டு­கை­யிலும் கூட பேசா­தி­ருந்து விட்டார். இவ­ரிடம் அந்த அள­வுக்கு மத, இன, மொழி மேலா­தி­க்கம் இருப்­பதே அதற்குக் கார­ண­மாகும். இம்­முறை நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு என்ன-? வினை விதைத்­தவன் வினை­ய­றுப்பான்.

திணை விதைத்­தவன் திணை­ய­றுப்பான் என்­ப­துபோல் இவர் விதைத்­த­தையே மகிந்த அறு­வடை செய்­தி­ருக்­கிறார். சிறு­பான்­மை­க­ளோடு இணங்கி வாழும் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்ற நிலை­யி­லேயே சஜித் தோல்­வி­யுற்­றி­யி­ருக்­கிறார். இனி­யேனும் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க பேரி­ன­வா­தத்­தி­லி­ருந்து மீள வேண்டும். அண்­மையில் ரணில் சிங்­கள வாக்­கு­களில் கவனம் தேவை என்றார். இதன் மூலம் பெளத்த சிங்­கள வாக்­கு­களை அதி­க­மா­கப்­பெறும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றதா என்­பதே கேள்­வி­யாகும். பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மூலம் ஐ.தே.கவின் தேசியப் பட்­டி­யலில் எம்.பியான அது­ர­லியே ரதன தேரர் நிகழ்த்­திய முஸ்லிம் விரோத செயற்­பா­டு­களை ரணிலால் தடுக்க முடி­யா­தி­ருந்­தது. முடிவில் அந்த பிக்கு இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரித்தார். கல­கொட அத்தே ஞான­சார தேரரின் முஸ்லிம் எதிர்ப்பு அட்­டூ­ழி­யங்­க­ளின்­போது ஐ.தே.க எம்­பி­யான விஜே­தாச ராஜ­பக்­ ஷதான் நீதி­ய­மைச்­ச­ராக இருந்தார். எனினும் அவர் அப்­போது செய­லற்­றி­ருந்­ததை ரணில் கண்­டு­கொள்­ள­வில்லை.

பின்னர் அண்­மையில் சிறு­கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் வாய்ப்­பான 5 வீத வெட்­டுப்­புள்­ளியைத் தேர்தல் முறை­யி­லி­ருந்து நீக்கி 12.5 வீத வெட்­டுப்­புள்­ளியைக் கொண்டு வர தனி­நபர் பிரே­ர­ணைக்கு விஜே­தாச ராஜபக் ஷ

முன்­ன­றி­விப்பு செய்­த­போதும் ரணில் ஆட்­சே­பிக்­க­வில்லை. நிகழ்ந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் விஜே­தாச ராஜபக் ஷவும் கூட மகிந்த ராஜபக் ஷ அணியில் சேர்ந்து கொண்டார். ஐ.தே.க எம்­பி­யான தயா­க­ம­கே­யை­யா­வது ரணில் பேரி­ன­வா­தத்­தை­விட்டும் கழற்றி விட்­டி­ருந்­தாரா? அவ­ரையும் அவ­ரது போக்கில் விட்­டி­ருந்தார்.

இறக்­காமம் முஸ்லிம் பகுதி பெரும்­பான்மைச் சமூகம் அறவே அற்ற பிர­தேசம் எனினும் அங்­குள்ள மாயக்­கல்­லி­ம­லையில் சில பிக்­குகள் வலுக்­கட்­டா­ய­மாக சிலையை வைத்­தார்கள். தயா­க­ம­கேவின் முழு ஆத­ர­வினால் அந்த சிலை இன்னும் அப்­ப­டியே இருக்­கி­றது. ரணிலால் எதுவும் செய்ய முடி­யா­மற்­போ­னது. அதை அங்­கி­ருந்து அகற்­றினால் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­குவேன் எனவும் தயா­க­மகே மிரட்­டினார்.

தீக­வா­பிக்கு 500 ஏக்­கரே சொந்தம் என அஷ்ரப் அமைச்­ச­ராக இருக்­கையில் அள­விட்டு நிர்­ண­யித்து வர்த்­த­மா­னியில் இடம்­பெறச் செய்­தி­ருந்தும் கூட தயா­க­மகே அதை மறுத்து பாரிய அளவுப் பிர­தேசம் எனக்­கூ­றி­ய­தோடு அங்கு 12000 சிலைகள் வைக்­கப்­பட வேண்டும் யாரும் முன்­வந்தால் செல­வ­ழிப்பேன் எனவும் சூளு­ரைத்தார்.

இதையும் ரணில் கண்டு கொள்­ள­வில்லை.

கடந்த ஆண்டு கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்து பிரித்­தெ­டுத்து மூன்று சிங்­களத் தொகு­தி­களை அமைக்கும் முயற்­சியும் மேற்­கொள்­ளப்­பட்­டது. கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய தேர்தல் தொகு­தி­க­ளுக்குள் தான் முன்பு அஷ்ரப் கரை­யோர மாவட்­டத்தை முஸ்­லிம்­க­ளுக்­கெனக் கேட்­டி­ருந்தார். சிங்­க­ள­வ­ருக்கு 18 மாவட்­டங்­களும் தமி­ழர்க்கு 7 மாவட்­டங்­களும் இருக்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு முன்பே அமை­ய­வேண்­டி­யி­ருந்த கரை­யோர மாவட்டம் வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க இருக்­கையில் சிறு­பான்­மை­க­ளுக்கு எந்த பயனும் கிடைக்­க­வில்லை.

இலங்­கையில் 25 மாவட்­டங்­களும் 9 மாகா­ணங்­களும் இருக்­கின்­றன.

சிங்­கள மாவட்­டங்கள் 18 தமிழ் மாவட்­டங்கள் 7 எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு மாவட்­டமும் இல்லை. ஒரு சிறிய நிலப்­ப­கு­தியும் இல்லை.

அந்த வகையில் முஸ்­லிம்­களும் பாரம்­ப­ரிய தேசிய இனம் என்னும் வகையில் நில ரீதி­யான அதி­காரப் பகிர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் நியா­ய­மான பங்­கீடு இருக்க வேண்டும். இவை­களே அஷ்ரப் முன்­வைத்த கோரிக்­கை­க­ளாகும்.

மைத்­திரி அரசில் ரணில் பிர­த­ம­ராக இருந்­த­போது தான் திகா­ம­டுல்லை (அம்­பாறை) மாவட்­டத்தில் பொத்­துவில், சம்­மாந்­துறை, கல்­முனை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்து சில பகு­தி­களை இணைத்து மூன்று சிங்­கள தொகு­தி­களை அமைக்க முற்­பட்­டார்கள். பேரா­சி­ரியர் ஹிஸ்­புல்­லாஹ்வின் கண்­டு­பி­டிப்பால் தான் அம்­மு­யற்சி கைகூ­ட­வில்லை.

இறக்­கா­மத்­தி­லுள்ள மாயக்­கல்லி என்னும் குன்றில் சில பிக்­குகள் அடாத்­தாக வைத்த சிலை இன்றும் கூட அப்­ப­டியே இருக்­கி­றது.

முஸ்லிம் பிர­தே­சத்தில் வைக்­கப்­பட்ட அந்த சிலையை அகற்ற தனித்­துவ முஸ்லிம் அர­சியல் கட்­சி­களால் முடி­யாது போயிற்று. ஹக்கீம் எம்­பி­யாக இருக்கும் கண்டி மாவட்­டத்தில் தான் திகனை இருக்­கி­றது.

அங்கு பேரி­னக்­குண்­டர்கள் கொடூ­ர­மாகத் தாக்­கிய போதும் கூட ஹக்­கீமால் எதுவும் செய்ய முடி­ய­வில்லை. அப்­போது ரணிலின் கையில் தான் பாது­காப்­புக்குப் பொறுப்­பான சட்ட ஒழுங்கு அமைச்சு இருந்­தது. பொத்­துவில், சம்­மாந்­துறை, கல்­முனை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்து பிரித்­தெ­டுத்து 3 சிங்­களத் தொகு­தி­களை உரு­வாக்க முயன்­ற­துக்­கான காரணம் அஷ்ரப் கோரிய கரை­யோர மாவட்டக் கோரிக்­கையை அழிக்­க­வே­யாகும். காரணம் அம்­மூன்று தேர்தல் தொகு­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே அஷ்­ரபின் கரை­யோர மாவட்டக் கோரிக்கை அமைந்­தி­ருந்­தது.

ஐ.தே.க.விலி­ருந்து அண்­மையில் வில­கிய விஜே­தாச ராஜபக் ஷ எம்.பி.சுயா­தீன எம்­பி­யான பின் 12.5 வெட்­டுப்­புள்­ளியை மீண்டும் தேர்தல் முறையில் கொண்டு வந்து 5% வெட்­டுப்­புள்­ளியை அகற்­று­மாறு கோரி­யி­ருந்தார். அவர் இதைப் பாரா­ளு­மன்­றத்­திலும் தனி­நபர் பிரே­ர­ணை­யாக முன்­வைக்கப் போவ­தா­கவும் குறிப்பிட்டிருந்தார்.

இது சிறு­கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்­மை­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­துவ விட­யத்தில் அஷ்ரப் பெற்றுத் தந்த வாய்ப்­புக்கு ஆப்பு வைக்கும் முயற்­சி­யாகும். தொகுதி நிர்­ண­யத்தின் மூலமும் 21 முஸ்லிம் எம்­பிக்­களில் 8 பேரைக் குறைத்து 13 பேராக்­கவும் பிர­யத்­தனம் செய்­யப்­பட்­டி­ருந்­தது.
அஷ்­ரபின் அர­சியல் மதி­யூ­கத்தால் முஸ்லிம் சமூகம் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளோடு சுய­மாகக் குர­லெ­ழுப்ப முடிந்­தது. இதன் மூலம் அவர் இரு­முறை ஆட்­சி­களை மாற்றிக் காட்­டினார். அது கால­வரை பேரி­ன­வா­தத்­துக்கு இணங்கி சலு­கை­யையும் தய­வையும் நாடி அலங்­கார பத­வி­களை மட்டும் அலங்­க­ரித்துக் கொண்­டி­ருந்த முஸ்லிம் சமூகம் அஷ்­ரபால் விழித்துக் கொண்­டதைக் கண்ட சிங்­களப் பேரி­ன­வா­திகள் புதுப்­புது வியூ­கங்­களைக் கையாண்­டார்கள்.

* தனித்­துவ முஸ்லிம் கட்சி 4 பிரி­வு­க­ளாக ஆக்­கப்­பட்­டது.

* ஒற்றைத் தனித்­துவத் தலை­மைக்குப் பதி­லாக பல தனித்­துவத் தலை­மைகள் உரு­வாக்­கப்­பட்­டன.

* பெருந்­தே­சியக் கட்­சி­களின் முக­வர்­க­ளாகத் தனித்­துவத் தலை­மைகள் ஆக்­கப்­பட்­டன.

* அடிப்­படைக் கொள்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்­தாமல் அமைச்சுப் பத­வி­க­ளுக்கும் அபி­வி­ருத்­தி­க­ளுக்­கு­மாக முன் சென்­றதால் தலைமை பத­வியில் நிரந்­தர இருப்பை நாடி நின்­றது.

* தேவை­க­ளுக்கு ஏற்­ற­வாறு கொள்­கை­க­ளையும் அங்­கத்­த­வர்­க­ளையும் மாற்றிக் கொண்டு ஜன­நா­யக அடிப்­ப­டைக்கும் புறம்­பாக செயற்­படும் நிலையும் ஏற்­பட்­டி­ருந்­தது.

பேரினவாதத்தை உருவாக்கி வளர்த்து சிறுபான்மைகளுக்கு ஊறு செய்தார். மகிந்தவிடம் ஏமாந்ததற்கே மன்னிப்பு கோருகிறார் பாட்டலி சம்பிக்க ரணவக.-Vidivelli

ஏ.ஜே.எம்.நிழாம்

Leave A Reply

Your email address will not be published.