பாரிய போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்

நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

0 702

பாரிய போதைப்­பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கு­வதன் மூலமே போதைப்­பொருள் வியா­பா­ரத்தை கட்­டுப்­ப­டுத்­தலாம் என நீதி, மனித உரி­மைகள், சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

புதிய வரு­டத்தில் நீதி அமைச்சில் பணி­களை ஆரம்­பிக்கும் நிகழ்வு நேற்று இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், அமைச்சுப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட பின்னர் சிறைச்­சா­லைகள் பல­வற்­றுக்கு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைக்­காக சென்­றி­ருந்தேன். அப்­போது பகுப்­பாய்வு அறிக்­கைகள் தாம­திப்­பதன் கார­ண­மாக ஹெரோயின் போதைப்­பொருள் தொடர்­பான வழக்­குகள் பாரி­ய­ளவில் நீதி­மன்­றங்­களில் குவிந்­தி­ருக்­கின்­ற­மையை அறிந்­து­கொள்ள முடிந்­தது.

அத்­துடன் ஹெரோயின் போதைப்­பொருள் வியா­பாரம் செய்­ப­வர்கள் மற்றும் அதனை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை பிரித்­த­றிந்து கொள்­வ­தற்­காக பொலிஸார் கடைப்­பி­டித்­து­வரும் முறையில் எமக்குத் திருப்­தி­யில்லை. ஒரு பக்கட் குடு வைத்­தி­ருந்­த­வர்­க­ளையும் போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளு­டனே சேர்க்­கின்­றனர். அதனால் பிணை­யில்­லாமல் அவர்­களும் விளக்­க­ம­றி­யலில் இருக்­க­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கின்­றது.

அதனால் இது­தொ­டர்­பாக பொலி­ஸாரும் எமது அமைச்சும் தீவி­ர­மாக ஆராய்ந்து நட­வ­டிக்கை மேற்­கொண்டால், சிறைச்­சா­லை­களில் நிலவும் இட நெருக்­க­டியை கட்­டுப்­ப­டுத்­தலாம். அத்­துடன் போதைப்­பொருள் வியா­பா­ரி­க­ளுக்­கெ­தி­ராக சட்­டத்தை கடு­மை­யாக நிறை­வேற்­ற­வேண்டும். ஹெரோயின் வியா­பாரம் செய்­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து 5, 10 கிலோ வரை கிடைக்­கப்­பெ­று­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கு­வது நியா­ய­மாகும்.

அமெ­ரிக்கா, மலே­சியா, சிங்­கப்பூர் போன்ற நாடு­களில் மரண தண்­டனை நிறை­வேற்ற முடியும் என்றால் ஏன் எங்­க­ளுக்கு அதனை செய்ய முடி­யாது. நாங்கள் இதனை நிறை­வேற்­றப்­போகும் போதுதான், வெளி­நாட்டு சக்­திகள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இதற்கு எதி­ராக குரல் கொடுக்­கின்­றன. என்னைப் பொறுத்­த­வரை, ஏனைய விட­யங்கள் இல்­லா­விட்­டாலும் பாரிய போதைப்­பொருள் வியா­பா­ரி­களை இணங்­கண்டு அவர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­று­வது நியா­ய­மாகும். இது­தொ­டர்­பாக நாங்கள் தீர்­மானம் ஒன்றை மேற்­கொண்டால் போதைப்­பொருள் வியா­பா­ரி­களை பாரி­ய­ளவில் கட்­டுப்­ப­டுத்­தலாம் என்றே நினைக்­கின்றேன்.

அவ்­வாறு இல்­லாமல் வீதி­யோ­ரங்­களில் ஓர் இரண்டு குடு பக்­கட்­டு­களை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளையும் வீதி­யோ­ரங்­களில் போதை­யுடன் இருப்­ப­வர்­க­ளையும் சிறை­யி­ல­டைப்­பதன் மூலம் இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாது. போதைப்­பொருள் கடத்­தலை கட்­டுப்­ப­டுத்த கடற்­படை உட்பட பிரிவுகள் மிகவும் ஆர்வத்துடன் செயற்படுகின்றபோதும் பூகோள வடிவில் எமது நாடு அமைந்திருக்கும் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கலாம். என்றாலும் அதுதொடர்பில் தேவையான முறைமைகளை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.