பாராளுமன்றம் நாளை கூடுகிறது

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையும் இடம்பெறும்

0 670

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது கூட்­டத்­தொடர் நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 10.00 மணிக்கு கூட­வுள்­ளது. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் கொள்கைப் பிர­க­டன உரையை அடுத்து அன்­றைய தினமே பிற்­பகல் 1 மணிக்கு மீண்டும் பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. கொள்கைப் பிர­க­டன உரையைத் தொடர்ந்து பிற்­பகல் 12.30 மணிக்கு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

அதில் இவ்­வ­ருடம் ஜன­வரி 07 ஆம் திகதி முதல் பாரா­ளு­மன்­றத்தின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது பற்­றியும் விளக்­க­ம­ளிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கட்சித் தலைவர் கூட்­டத்தின் பின்னர் பிற்­பகல் 1 மணிக்கு கூடும் பாரா­ளு­மன்ற அமர்வு மாலை 6.00 மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

மேலும், புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சபா­நா­யகர் முன்­னி­லையில் பத­வி­யேற்றல் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தா­சவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சபா­நா­ய­க­ரினால் அறி­விக்­கப்­ப­டுதல் உள்­ளிட்ட சபா­நா­ய­கரின் அறி­விப்­புக்கள் என்­ப­னவும் இடம்­பெ­ற­வுள்­ளன.

நாளை ஜனா­தி­ப­தி­யினால் பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொடர் ஆரம்­பித்­து­வைக்கும் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் பற்றி கட்சித் தலை­வர்­க­ளுக்கு சபா­நா­யகர் அலுவலகத்தினால் விளக்கமளிக் கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா உள்ளிட்ட பதவிகள் தொடர்பிலும் அறிவிக்கப்படவுள்ளன.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.