இனவாதத்துக்கு துணைபோகும் தேரர்களை கைது செய்ய வேண்டும்

ரிஷாத் பதியுதீன் எம்.பி

0 817

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்டி இனங்­க­ளுக்­கி­டையில் கல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்கும் பாஹி­யங்­கல ஆனந்த சாகர தேரர் உட்­பட இன­வா­தத்­துக்குத் துணை­போகும் பெளத்த தேரர்­களே முதலில் கைது செய்­யப்­பட வேண்டும்.அவ்­வாறு கைது செய்­யப்­பட்­டாலே நாட்டின் எதிர்­காலம் சுபீட்­ச­மாக அமையும் என முன்னாள் அமைச்­சரும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

ஆனந்த சாகர தேரர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யு­தீனை உட­ன­டி­யாகக் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்­க­வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ஆனந்த சாகர தேரர் என்னைக் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்­க­வேண்டும் எனக் கூறி­யுள்ளார்.

பிணை பெற முடி­யாத விஷேட உயர் நீதி­மன்றில் தினமும் தொட­ராக வாழ்க்கை விசா­ரித்து தண்­டனை வழங்­க­வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­துள்ளார். அத்­தோடு என்னைக் கைது செய்ய வலி­யு­றுத்தி ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்­றையும் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

நான் சுதந்­தி­ர­மாக வெளியில் இருந்தால் இன­வாதம், மத­வாதம் அதி­க­ரிக்கும் எனவும் கூறி­யுள்ளார். உண்­மையில் ஆனந்த சாகர தேரர் சுதந்­தி­ர­மாக வெளியில் இருந்­தா­லேயே இன­வா­தமும், மத­வா­தமும் உச்ச நிலைக்குச் செல்லும். எனவே அவரே முதலில் கைது செய்­யப்­பட்டு சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் பரப்­பு­ப­வர்­க­ளுக்கு எதிராகவும், வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்பவர் களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டங்களைக்கொண்டு வரவேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.