வருகின்ற பொது தேர்தலில் முஸ்லிம் சமூகம் இன ரீதியான கட்சிகளை தவிர்க்க வேண்டும்

லாபீர் ஹாஜியார்

0 829

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முஸ்­லிம்கள் இன ரீதி­யி­லான கட்­சி­களைத் தவிர்த்து முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்கும் பாது­காப்­புக்கும் எப்­போதும் உத்­த­ர­வா­த­ம­ளிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யையே ஆத­ரிக்­க­வேண்டும். கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் கண்­டியில் இடம்­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையில் முஸ்லிம்– தமிழ் அர­சியல் கட்­சிகள் பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளன. அக்­கட்­சி­களின் எதிர்­காலம் கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது. முஸ்­லிம்கள் முஸ்லிம் கட்­சி­க­ளையும், தமி­ழர்கள் தமிழ்க் கட்­சி­க­ளையும் ஆத­ரிப்­பதால் பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது.

முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­மட்டில் மாற்­று­வழி ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரித்து தமது வாக்­கு­களை வழங்­கு­வ­தாகும்.

பெரும்­பான்மைக் கட்­சிகள் சிறு­பான்மைக் கட்­சி­களை இணைத்துக் கொண்டு தேர்­தலில் போட்­டி­யி­டு­வதும் தற்­போது கேள்­விக்­கு­றி­யாகியுள்­ளது. இவ்­வா­றான நிலைக்கு அர­சியல் கள­நி­லைமை மாற்­ற­மடைந்துள்­ளது. எனவே சிறு­பான்மை மக்கள் தங்கள் நலன்­பேணும் பெரும்­பான்மைக் கட்­சி­க­ளையே ஆத­ரிக்­க­வேண்டும்.

பெரும்பான்மைக் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களுக்குப் பாதுகாப்பான கட்சி என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.