ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம்: இருவருக்கு நிபந்தனையுடன் பிணை

61 பேரின் விளக்கமறியல் 14 ஆம் திகதி வரை நீடிப்பு

0 720

உயிர்த்த ஞாயி­று தாக்­கு­தலின் பின்னர் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காத்­தான்­குடி மற்றும் காத்­தான்­கு­டியை அண்­டிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த 63 பேரில் இரண்டு பேர் நிபந்­த­னை­யுடன் கூடிய பிணையில் நேற்று விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் ஏனைய 61 பேரி­னதும் விளக்­க­ம­றியல்எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயி­றன்று இடம் பெற்ற தாக்­கு­தலின் பின்னர் ஸஹ்றான் குழு­வோடு தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா போன்ற இடங்­க­ளுக்கு பயிற்­சிக்­காக சென்­றார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும் கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர்கள் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போதே இரண்டு பேர் நிபந்­த­னை­யுடன் கூடிய பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் ஏனைய 61 பேரி­னதும் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட குறித்த இரண்டு சந்­தேக நபர்­களும் தலா ஐந்து இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணை­யிலும் 25000 ருபா ரொக்கப் பிணை­யிலும் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் இவர்­க­ளுக்கு வெளி­நாடு செல்­லவும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்கள் தமது முக­வ­ரியை மாற்­று­வ­தாயின் பொலி­சா­ருக்கு அறி­விக்க வேண்டும் எனவும் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீத­ிவா­னினால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வி­ரண்டு சந்­தேக நபர்­களும் மோட்டார் சைக்கிள் விற்­பனை செய்­ப­வர்கள் எனவும் இவர்கள் ஸஹ்­றானின் சகோ­த­ரர்­களின் மோட்டார் சைக்­கிளை விற்­பனை செய்­த­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­வர்கள் என்றும் தெரிய வரு­கின்­றது.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் நேற்று மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­ட­துடன் நீதி­மன்­றத்தின் பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

குறித்த சந்­தேக நபர்கள் கடந்த மாதம் வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களில் பலர் தற்போது நாட்டில் வெவ்வேறு பாகங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vididvelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.