என்மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சேன்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்

0 771

பெளத்த மத இன­வாத துற­விகள் முஸ்லிம் சமூகம் சார்­பான எனது குரலை நசுக்­கு­வ­தற்கு அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கி­றார்கள். ஜன­நா­யக நாட்டில் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாக செயற்­படும் அவர்கள் இறு­தியில் தோல்­வி­யையே எதிர்­கொள்­வார்கள். நான் எதற்கும் அஞ்­சப்­போ­வ­தில்லை. சி.ஐ.டி. என்னை விசா­ர­ணைக்கு அழைத்தால் தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்­குவேன் என முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மாக ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

“ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல்” தொடர்­பாக சி.ஐ.டி.யினர் நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­தனர். சுமார் 3 மணித்­தி­யா­லங்கள் அவ­ரது வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்­டது. இது தொடர்பில் வின­வி­ய­போதே விடி­வெள்­ளிக்கு அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்; ‘உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்­பாக என் மீதும் முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் அபாண்­ட­மாக பொய் குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கி­றது. ஒரு சிறு குழுவே இத்­தாக்­கு­த­லுக்குப் பொறுப்­பா­னது. இத்­தாக்­கு­தலை நாம் நூறு வீதம் எதிர்த்தோம். சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் காட்­டியும் கொடுத்தோம். நாங்கள் ஜன­நா­ய­கத்தை மதிப்­ப­வர்கள்.

ஆனந்­த­சா­க­ர­தேரர் போன்­ற­வர்கள் என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்­கி­றார்­ககள். அவர்கள் நினைத்­த­வா­றெல்லாம் சிறையில் அடைக்­க­மு­டி­யாது. நான் பயங்­க­ர­வாத சம்­ப­வங்­க­ளுடன் துளி­ய­ளவும் சம்­பந்­தப்­ப­டா­தவன். இன­வாத பெளத்த துற­வி­களின் இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளினால் நாட்டின் ஸ்திரத்­தன்­மைக்குப் பங்கம் ஏற்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலைமை நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாகும்.

அமைச்சர் விமல் வீர­வன்­சவும் என்­னைப்­பற்றி தவ­றான தக­வல்­களைப் பரப்பி வரு­கிறார். அவ­ருக்கு நான் சவால்­வி­டு­கிறேன். என் மீதான குற்­றச்­சாட்­டு­களை நிரூ­பிக்­கும்­படி நான் கோரு­கிறேன்.
குற்­ற­மற்­றவன் என்ற வகையில் எந்­த­வ­கை­யான விசா­ர­ணை­க­ளுக்கும் நான் தயா­ராக இருக்­கிறேன். சி.ஐ.டி. க்கு தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்கத்தயாராக இருக்கிறேன்.

“உயிர்த்த ஞாயிறு” தாக்குதல்களைக் காரணம் காட்டி எமது குரலை நசுக்க முயல்கிறார்கள். நிரபராதி என்ற வகையில் எங்கள் குரல் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.