பிரதமரின் நடவடிக்கையால் ஹஜ் கோட்டா அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர்

0 725

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் தூதுக்­குழு தொழில் வல்­லு­நர்­களை மாத்­தி­ரமே உள்­ள­டக்­கி­யுள்­ளது. இத­னா­லேயே அத்­தூதுக் குழு­வினால் இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த 2850 ஹஜ் கோட்­டாவை 3500 ஆக அதி­க­ரித்துப் பெற்றுக் கொள்ள முடி­யு­மாக இருந்­தது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

புதிய ஹஜ் தூதுக்­குழு தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘ஹஜ் தூதுக்­கு­ழுவில் அனு­பவம் வாய்ந்த தொழில் நிபு­ணர்­களே அங்கம் பெற்­றுள்­ளனர். அர­சி­யல்­வா­தி­க­ளல்ல. மர்ஜான் பளீல் தலை­மையில் ஐவர் கொண்ட குழு மேல­திக ஹஜ் கோட்­டாவும் பெற்றுக் கொள்ளும் என்­பதில் நம்­பிக்கை வைக்­கலாம்.

இலங்­கையின் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் காலங்­களில் சிறந்த சேவை­யொன்­றினை எதிர்­பார்க்­கலாம். ஊழல்­க­ளற்ற சிறந்த சேவை­யையே அனை­வரும் எதிர்­பார்க்­கி­றார்கள். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவின் கீழ் கலா­சார அமைச்சு இயங்கி வருவதால் ஹஜ் ஏற்பாடுகளில் பல புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.