ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் அரசியல் கலக்கக்கூடாது

0 677

பத­விக்கு வந்­துள்ள புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ மக்கள் நலன் கரு­திய பல திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கின்­றமை மக்­களைப் பெரிதும் கவர்ந்­துள்­ளது. நாட்டை ஆட்சி செய்த வேறு எந்த ஜனா­தி­ப­தியும் மேற்­கொள்­ளாத செயற்­பா­டு­களில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொண்­டுள்ளார்.

இந்த வகையில் அரச மற்றும் அரச சபைகள், நிறு­வ­னங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள சிற்­றூ­ழியர் நிய­ம­னங்கள் குறைந்த வரு­மா­னம்­பெறும் குடும்­பத்தைச் சேர்ந்­தவர் களுக்கே வழங்­கப்­ப­ட­வுள்­ளன. க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் எட்டாம் தரம் வரை­யி­லான கல்வித் தகை­மை­களைக் கொண்­ட­வர்­க­ளுக்கே இந்­நி­ய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

முதற்­கட்­ட­மாக ஒரு இலட்சம் பேருக்கு இவ்­வா­றான நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் உத்­த­ர­வுக்­க­மை­வாக இந்­நி­ய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. திணைக்­க­ளங்கள் அமைச்­சுகள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளுக்கு சிற்­றூ­ழி­யர்கள், தொழி­லா­ளர்கள், காரி­யா­லய உத­வி­யா­ளர்கள் இந்த அடிப்­ப­டை­யிலே நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இதற்­கென பல்­துறை அபி­வி­ருத்திச் செய­லணி ஒன்று நிறு­வப்­ப­ட­வுள்­ளது. இதற்கு அமைச்­ச­ர­வையும் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந்தச் செய­ல­ணிக்கு இணைத்துக் கொள்­ளப்­படும் க.பொ.த. சாதா­ரண தரம் மற்றும் எட்டாம் தரம்­வரை பயின்ற இளைஞர் யுவ­தி­க­ளுக்கு குறு­கி­ய­கால பயிற்சி வழங்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு திணைக்­க­ளங்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­களில் தொழில் வாய்ப்­புகள் வழங்­கப்­படும். பல்­வேறு கார­ணங்­க­ளினால் கல்­வியை இடை நடுவில் கைவிட்­டுள்ள இளைஞர், யுவ­தி­களின் எதிர்­காலம் இதனால் சுபீட்­ச­ம­டையும்.

இது­வரை காலம் இந்த தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வது அரச தரப்பு அர­சி­யல்­வா­தி­களின் வரப்­பி­ர­சா­த­மா­கவே இருந்­தது. அர­சாங்­க­மொன்று பத­விக்கு வந்­ததும் அர­சி­யல்­வா­திகள் முதலில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கே சிற்­றூ­ழியர் நிய­ம­னங்­களை வழங்­கி­னார்கள்.

இந்தப் பத­வி­களை பட்­ட­தா­ரிகள் மற்றும் உயர்­த­ரத்தில் சித்­தி­ய­டைந்­த­வர்கள் கூட பெற்று வந்­தனர். அர­சாங்க தொழில் என்­பதால் உயர்­கல்வி கற்­ற­வர்கள் இந்த தொழிலில் அமர்ந்­தனர். என்­றாலும் அவர்கள் மனக்­கு­றை­யு­ட­னேயே இத்­தொ­ழில்­களில் தொடர்ந்­தனர். இதனால் மக்­க­ளுக்குச் சிறந்த சேவையும் கிட்­ட­வில்லை.

இதே­வேளை, உயர்­கல்வி கற்­ற­வர்கள் இவ்­வா­றான தொழில்­களில் அமர்ந்­ததால் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் எட்டாம் தரம் வரை பயின்­ற­வர்கள் தொழில் வாய்ப்­பின்றி பல்­வேறு துன்­பங்­க­ளுக்கும் உள்­ளா­கினர். இந்­நி­லை­யில மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் 10 ஆம் தரம் மற்றும் 8 ஆம் தரம் வரை பயின்­றவர்களை மாத்­திரம், அதுவும் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­களை சிற்­றூ­ழி­யர்­க­ளாக நிய­மிக்க திட்­ட­மிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் நாம் மேலும் ஒரு விட­யத்­தையும் சுட்­டிக்­காட்­ட­வேண்டும். ஒரு இலட்சம் வேலை வாய்ப்­பினை முதற்­கட்­ட­மாக வழங்­கு­வ­தற்­கென நிறு­வப்­ப­ட­வுள்ள செய­லணி அர­சியல் செய­ல­ணி­யாக மாற்றம் பெற்­று­வி­டக்­கூ­டாது. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இது விட­யத்தில் கூடுதல் கவனம் செலுத்­த­வேண்டும். கல்­வியைத் தொட­ராது எட்டாம் தரத்­திலும் 10 ஆம் தரத்­திலும் நிறுத்திக் கொண்­ட­வர்­க­ளுக்கு சிறந்­தவோர் எதிர்­கா­லத்தை அமைத்துக் கொடுப்­பது பய­னுள்­ளதே.

இந்தச் செய­லணி நாட்டில் மாற்­றுக்­க­ருத்துக் கொண்ட அர­சியல் குழுக்­க­ளுக்கு எதி­ரா­ன­தாக இருக்­கக்­கூ­டாது. அர­சியல் கட்சி மற்றும் இன, மத பேத­மின்றி அனை­வ­ருக்கும் வேலை­வாய்ப்­பு­களை வழங்­க­வேண்டும்.

இதே­வேளை இன்னும் 3 மாத காலத்­துக்குள் பொதுத் தேர்­த­லொன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்தச் செய­லணி அர­சியல் சுய­ந­ல­நோக்­கோடு உரு­வாக்­கப்­பட உள்­ள­தாக குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­ப­டலாம் என்­பதை அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்டும்.

இவ்­வாறு ஒரு இலட்சம் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு சிற்­றூ­ழியர் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு அமைக்கப்படவுள்ள செயலணி அரசியல் பின்னணியைக் கொண்டதல்ல என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறான ஒரு செயலணி நிறுவப்பட்டு சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட விருப்பது தொடர்பில் அரச தரப்பு அரசியல்வாதிகள் அதிருப்தியடையலாம் என்றாலும் ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும். இத்திட்டம் அரசியல் கலப்பற்று செயற்படுத்தப்பட வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.