பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறிக் கைதுசெய்யப்பட்டமையால் சம்பிக்க ரணவக்கவுக்கு பாரிய அநீதியேற்பட்டுள்ளது. அதனாலே சிறைச்சாலைக்கு சென்று சுகம் விசாரிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தாரென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக சபாநாயர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் அவரை சிறைச்சாலைக்கு சென்று பார்த்தமை தொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்துவந்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்வகையில் சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, கைது செய்யப்படும்போது இதுவரை பின்பற்றப்பட்டுவந்த சம்பிரதாயத்துக்கு மாற்றமாக கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய அது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தமை மற்றும் சம்பிக்க ரணவக்கவை சுகம் விசாரிக்க சிறைச்சாலைக்கு சென்றமை தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுவந்த கருத்துக்கள் எமது கவனத்துக்கு வந்திருக்கின்றன.
இந்த சம்பவத்தின்போது சபாநாயகரினால் கவனம் செலுத்தி இருப்பது, சட்டத்தை நிலைநாட்டும்போது, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சாதாரண காரணம் ஒன்றுக்காக கைதுசெய்வதுதொடர்பில் எந்த தர்க்கமும் இல்லாவிட்டாலும் அதுதொடர்பான நடைமுறையை பின்பற்றவேண்டும்.
இதற்கு முன்னர் முறையற்ற விதத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்கள் தொடர்பில் கவனம்செலுத்தும்போது சபாநாயகர் அவ்வாறானவர்களின் அரசியல் கட்சி தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்பது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மனசாட்சிக்கு இரகசியமாக இருக்காது.
என்றாலும், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்த பின்னர் அதுதொடர்பில் விசேட அவதானம் செலுத்தியதும் சிறைச்சாலைக்கு சென்று அவரின் சுகம் விசாரிக்க நடவடிக்கை எடுத்ததும், தற்போது நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயத்தை மீறி அவரை கைதுசெய்யும்போது பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அவருக்கு பாரிய அநீதி ஏற்பட்டமைக்காகும். இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உதாரணமாகத் தெரிவிக்க முடியும் என்பதுடன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இதுவரை 50 நாட்களுக்கும் அதிகமான காலம் சிறையில் இருந்து வருகின்றார். என்றாலும் அவரது சுகம் விசாரிக்க சபாநாயர் ஒருபோதும் சிறைச்சாலைக்கு சென்றதில்லை.
சம்பிரதாயத்துக்கு மாற்றமாகக் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி சபாநாயகர் பாதுகாக்க முயற்சித்தது, ஒரு கட்சியினதோ அல்லது தனி நபரது வரப்பிரசாதத்தையல்ல என்பதை கவனத்திற்கொள்வோம். தற்காலத்திலும் எதிர்காலத்திலும் அனைத்துக் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஜனநாயக பாராளுமன்ற முறைமையில் முக்கியமான சம்பிரதாயங்கள் ஊடாக கிடைக்கப்பெறும் வரப்பிரசாதங்களை பாதுக்கும் பொறுப்பு இதன்மூலம் ஏற்படும்.எவ்வாறான விமர்சனங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றி ஜனநாயகத்துக்காக மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட சபாநாயகர் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்