அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி நிதியில்: நிர்மாணிக்கப்பட்டு 11 வருடங்களாகியும் கையளிக்கப்படாத 500 சுனாமி வீடுகள்

பற்றைக் காடுகளால் மூடப்பட்டு விஷ ஜந்துக்களின் உறைவிடமாகவும் மாறியுள்ளன

0 759

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 15 ஆண்­டு­க­ளா­கியும் இவ் அனர்த்­தத்தின் கார­ண­மாக வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்­க­ளுக்­காக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள் இது­வரை கைய­ளிக்­கப்­ப­டாமல் உள்­ளதால் அம்­மக்கள் கலலை தெரி­விக்­கின்­றனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்­பட்­ட­தனைத் தொடர்ந்து அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்­களின் நலன் கருதி சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் நிதி மூலம் நவீன முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 500 வீடுகள் கொண்ட வீட­மைப்புத் திட்டம் இது­வரை மக்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­டாமல் உள்­ளது.

சுனாமி பேர­லையின் கோரத் தாண்­ட­வத்­தினால் அக்­க­ரைப்­பற்று கடற்­கரைப் பிர­தே­சத்­தினை அண்­டிய பகு­தி­களில் வாழ்ந்த நூற்றுக்கணக்­கான வீடுகள் அழிந்­தொ­ழிந்­தன. அக்­க­ரைப்­பற்­று- பத்ர் நகர்ப் பிர­தே­சத்­தி­லேயே சுனா­மியின் பாதிப்­புக்கள் பதி­வாகி இருந்­தன.

இதற்­க­மை­வாக, முன்னாள் வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை அமைச்­ச­ராக இருந்த பேரியல் அஷ்­ரஃபின் முயற்­சியின் பய­னாக சவூதி அரே­பிய நாட்டின் ஸகாத் நிதி­யினைக் கொண்டு சுனா­மி­யினால் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று பிர­தேச மக்­க­ளுக்­காக அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட ஆலிம் நகர் கிரா­மத்­திற்கு அண்­மையில் அமைந்­துள்ள நுரைச்­சோலைப் பிர­தே­சத்தில் சுமார் 60 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட நிலப்­ப­ரப்பில் அனைத்து வச­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தான நவீன வீட­மைப்புத் திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்­டது.

இவ் வீட­மைப்புத் திட்­டத்­தினை உரு­வாக்கும் பொருட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி இதற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் சுமார் 500 மில்­லியன் ரூபா­விற்கும் அதி­க­மான நிதி­யினைக் கொண்டு நவீன முறையில் 500 வீடுகள் இங்கு நிர்­மா­ணப்­பட்­டன. சில கார­ணங்­களின் அடிப்­ப­டையில் இவ்­வீ­டுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு 14 ஆண்­டு­களைக் கடந்தும் இது­வரை இவ்­வீ­டுகள் உரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­ம­லி­ருப்­பது மிகுந்து வேத­னை­ய­ளிக்­கின்­றது என பாதிக்­கப்­பட்ட மக்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இக்­கி­ரா­மத்தில் மகளிர் பாட­சாலை, ஆண்கள் பாட­சாலை, நவீன வைத்­தி­ய­சாலை, பாரிய மண்­ட­பத்­து­ட­னான சன­ச­மூக நிலையம், பள்­ளி­வாசல், பஸ் தரிப்பு நிலை­யங்கள், விளை­யாட்டு மைதானம், நவீன சந்தைக் கட்­ட­டங்கள் மற்றும் நவீன ஒய்­வ­றைகள் உள்­ளிட்ட பல்­வேறு வச­திகள் இங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

நவீன முறையில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இங்­குள்ள வீடு­களும் பொது நிறு­வ­னங்­களின் கட்­ட­டங்­களும் விலங்கு, பற­வைகள் மற்றும் விஷ­ஜந்­துக்­களின் வாழி­ட­மாக மாறி வரு­கின்­றன. இக்­கட்­ட­டங்­களில் பெருந் தொகை­யான நிதி கொண்டு பொருத்­தப்­பட்ட பல்­வேறு பொருட்கள் கள­வா­டப்­பட்­டுள்­ள­துடன், பெரு­ம­ள­வி­லா­னவை சேத­ம­டைந்தும் காணப்­ப­டு­கின்­றன.

பற்றைக் காடு­களால் மூடப்­பட்டு விஷ ஜந்­துக்­களின் உறை­வி­ட­மா­கவும் மாறி­யுள்ள இவ்­வீ­ட­மைப்புத் திட்­டத்தில் பல்­வேறு சமூகவிரோத செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­வ­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இவ் வீடுகள் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தில் தொடுக்­கப்­பட்ட வழக்கின் பிர­காரம் இவ்­வீ­டுகள் கைய­ளிப்­பதில் கால தாமதம் ஏற்­பட்­ட­துடன், இவ்­வ­ழக்கின் தீர்ப்பின் பிர­காரம் இவ்­வீ­டுகள் இன விகி­தா­சார அடிப்­ப­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கி­ணங்க, அவ் இன விகி­தா­சாரம் என்­பது இலங்­கையின் இன விகி­தா­சா­ரமா? மாவட்­டத்தின் இன விகி­தா­சா­ரமா? பாதிக்­கப்­பட்ட அக்­க­ரைப்­பற்று மக்­களின் இன விகி­தா­சா­ரமா? என்ற தெளிவு கிடைக்­கா­மையால் இவ்­வீ­டுகள் பகிர்ந்­த­ளிப்பில் மேலும் கால தாமதம் ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது.

உற­வி­னர்கள் இல்லங்களிலும், அயலவர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பல்வேறு இன்னல்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருவதுடன், வீடுகள் கிடைக்காமல் சிலர் மரணமடைந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக உள்ளது. சொல்லொணாத் துயருடன் தமது வாழ்வினை நகர்த்தி வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் கையளிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.-Vidivelli

  • எம்.ஏ.றமீஸ்

Leave A Reply

Your email address will not be published.