புத்தளத்தில் இணைந்து போட்டியிடுவது குறித்து மு.கா-அ.இ.ம.கா ஆராய்வு

0 802

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் தொகு­திக்கு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூட்­டி­ணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் முதற்­கட்ட கலந்­து­ரை­யாடல் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் புத்­தளம் மாவட்ட அமைப்­பா­ளரும் புத்­தளம் நகர சபை தலை­வ­ரு­மான கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் புத்­தளம் மாவட்ட அமைப்­பா­ளரும் புத்­தளம் நகர சபை உறுப்­பி­ன­ரு­மான அலி சப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் புத்­தளம் பிராந்­திய அமைப்­பாளர் ஆப்தீன் எஹியா உட்­பட இரு கட்­சி­க­ளி­னதும் புத்­தள மாவட்ட உறுப்­பி­னர்­களும் இந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்­டனர்.

அதே­வேளை முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்பன இணைந்த கூட்­ட­மைப்­புடன் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளையும் இணைத்த கூட்­ட­மைப்பு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­யொன்றும் புத்­தளம் மாவட்ட ஐ.தே. கட்சி அமைப்பாளர் ஏ.ஓ. அலிகானின் இல்லத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • புத்தளம் நிருபர்

Leave A Reply

Your email address will not be published.