சுனாமி அனர்த்த 15 ஆவது நினைவு தினம் இன்று

காலை 9.25- 9.27 வரை நாடு முழுவதும் மௌன அஞ்சலி

0 686

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்­பது இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல , உல­கத்தில் யாராலும் மறக்க முடி­யா­த­வொரு நாளாகும். இலங்­கையில் சுமார் 35 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட உயிர்­களை காவு கொண்ட, ஐயா­யி­ரத்­துக்கும் மேற்­பட்­டோரை காணாமல் ஆக்­கிய சுனாமி பேரலை ஏற்­பட்டு இன்­றுடன் 15 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

2004 ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனா­மியால் உயி­ரி­ழந்த மக்­களை நினைவு கூரும்முக­மாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்­ச­ர­வையில் மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் மூலம் ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாது­காப்பு தின­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாது­காப்பு தினத்தில் சுனா­மியில் உயி­ரி­ழந்த மக்கள் நாட­ளா­விய ரீதியில் நினைவு கூரப்­ப­டு­கின்­றனர்.

அதற்­க­மைய பிர­தான நினைவுகூரல் நிகழ்வு முப்­ப­டை­யினர், பொலிஸார் மற்றும் பொதுமக்­களின் பங்­கு­பற்­ற­லுடன் காலி – தெல்­வத்த சுனாமி நினைவு தூபிக்­க­ருகில் இன்று காலை 9 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இன்­றைய தினம் காலை 9.25 மணி­முதல் 9.27 மணி­வரை சுனாமி உட்­பட வெவ்­வேறு அனர்த்­தங்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களை நினைவுகூரும் முக­மாக நாட­ளா­விய ரீதியில் இரண்டு நிமிடம் மௌன அஞ்­சலி செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.
அனைத்து அரச திணைக்­க­ளங்கள், தனியார் நிறு­வ­னங்கள், வழி­பாட்­டுத்­த­லங்கள் என்­ப­வற்றில் இவ்­வாறு மௌன அஞ்­சலி செலுத்­தப்­படும்.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு தேசிய பாது­காப்பு தினத்தை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதியில் சர்­வ­மத வழி­பா­டுகள் இடம்­பெ­ற­வுள்­ள­தோடு, உயி­ரி­ழந்த மக்­களின் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டுள்ள இடங்­க­ளிலும் அவர்­க­ளது குடி­யி­ருப்­புக்கள் உள்ள இடங்­க­ளிலும், சுனா­மியின் போது புகை­யி­ரத விபத்­துக்கள் ஏற்­பட்ட இடங்­க­ளிலும் நினைவுகூரல் நிகழ்­வினை மாவட்ட ரீதியில் முன்­னெ­டுப்­ப­தற்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

நினைவுகூரல் மாத்­தி­ர­மின்றி சுனாமி உள்­ளிட்ட ஏனைய ஏதே­னு­மொரு அனர்த்­தங்கள் ஏற்­ப­டும்­பட்­சத்தில் அதி­லி­ருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக 25 மாவட்­டங்­க­ளி­லு­முள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக விஷேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. அத்தோடு பொதுமக்களுக்கு இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.