பொதுத் தேர்தல் களத்தில் புது முகங்கள் அறிமுகம்

பொது ஜன பெரமுன தெரிவிப்பு

0 968

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்சி பல புது முகங்­களை கள­மி­றக்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யிடப் பட்­டுள்­ளன.இதே வேளை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி உட்­பட சில புது­மு­கங்கள் தேசிய பட்­டியல் மூலம் இணைத்­துக்­கொள்­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ரஜ­ரட்ட பல்­க­லைக்­க­ழக வைத்­திய பீடத்தின் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன, பேரா­தனை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சரித ஹேரத், கலா­நிதி நாலக கொட­ஹேவா, ‘வியத்­மக’ அமைப்பின் அநுர பர்­ணாந்து, தேசிய இளைஞர் சேவை மன்­றத்தின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி லலித் பியும் பெரேரா, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் டில்சான் உட்­பட மேலும் சிலர் பொதுத் தேர்­தலில் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன கட்­சியில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மன அநு­ரா­த­பு­ரத்­திலும், கலா­நிதி சரித ஹேரத் குரு­நா­க­லிலும், கலா­நிதி நாலக கொட­ஹேவா மற்றும் சட்­டத்­த­ரணி லலித் பியும் பெரேரா என்போர் கம்­ப­ஹா­விலும், தில­க­ரத்ன டில்சான் காலி மாவட்­டத்­திலும், அநுர பெர்­ணாந்து கொழும்­பிலும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை, தேசியப் பட்­டியல் மூலம் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் முன்னாள்ஆளுநர் அஜித் நிவாப் கப்ரால், கெவிது குமாரதுங்க ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.