பா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது

0 967

பேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் விடிவெள்ளிக்கு விசேட செவ்வி

தமி­ழக முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் மார்க்க ரீதி­யான பிரச்­சி­னைகள், இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­மைகள், வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த பார்வை, பூகோள ரீதி­யாக காணப்­ப­டு­கின்ற நெருக்­க­டிகள் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் இந்­திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலை­வரும் தமி­ழக மாநில தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பேரா­சி­ரியர் கே. எம். காதர் மொகைதீன் ‘விடி­வெள்­ளிக்கு’ அளித்த விசேட செவ்­வியில் பல்­வேறு கருத்­துக்­களை குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

நேர்காணல் : ஆர்.ராம்

அண்­மைக்­கா­ல­மாக தமி­ழ­கத்தில் உள்ள முஸ்லிம் சமூ­கத்­தினர் மார்க்கம் சம்­பந்­த­மாக முகங்­கொடும் பிர­தான பிரச்­சி­னைகள் எவை?

பதில்:- முத­லா­வ­தாக தமி­ழ­கத்தில் உள்ள முஸ்­லிம்­களின் விட­யங்­களை பார்ப்­போ­மானால் இங்கு தமிழ், உருது, இந்தி என வெவ்­வேறு மொழி பேசு­கின்­ற­வர்கள் உள்­ளார்கள். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்­படும் மார்க்க கொள்கை அடிப்­ப­டையில் அனை­வரும் ஒன்­றா­கவே உள்­ளனர்.

இருப்­பினும், பாபர் மசூதி இடிக்­கப்­பட்ட பிறகு அர­சியல் ரீதி­யாக  மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. பாபர் மசூதி இடிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக தமி­ழ­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கென முஸ்லிம் லீக் கட்சி மாத்­தி­ரமே காணப்­பட்­டது. ஆனால் அந்த மசூதி இடிக்­கப்­பட்­டதன் பின்னர் அதனை மையப்­ப­டுத்தி தமி­ழ­கத்தில் மாத்­திரம் 58 முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

ஜன­நா­யக வெளியில் பல அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தா­னது தவிர்க்­க­மு­டி­யாது என்­ப­தோடு அவை மார்க்க அக்­க­றை­யுடன் செயற்­பட்டால் சமூத்தின் பாது­காப்­புக்­குத்­தானே வலுச்­சேர்க்கும்?

பதில்:- அந்த அமைப்­புக்கள் மார்க்க ரீதி­யாக ஒரு நிலைப்­பாட்டில் இருக்­கின்­றன. ஆனால் தமி­ழ­கத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத், அ­கீதா தொடர்பில் சீர்­தி­ருத்­தங்­களை செய்யும் நோக்கில் புதிய கருத்­துக்­களை புகுத்­து­வ­தற்கு முய­லும்­போது

Leave A Reply

Your email address will not be published.