அனைத்து நிர்வாக மாவட்டங்களின் பாதுகாப்பு முப்படையினர் வசம்

விசேட வர்த்தமானியில் நேற்று ஜனாதிபதி கைச்சாத்து

0 767

நாட்டின் அமை­தியை பாது­காக்கும் வகையில் அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளுக்கும் முப்­ப­டை­யி­னரை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அனுப்பி வைத்­துள்ளார். இதற்­கான விசேட வர்த்­த­மானி அறி­விப்பு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பின் 40 ஆம் அத்­தி­யா­யத்தின் பொது­மக்கள் பாது­காப்பு கட்­ட­ளைச்­சட்­டத்தில் 12 ஆம் பிரிவின் பிர­காரம் ஆயுதம் தாங்­கிய படையின் சகல உறுப்­பி­னர்­க­ளையும் நாட்டு மக்­களின் அமை­தியை பேணு­வ­தற்கு அனைத்து நிர்­வாக மாவட்­டங்­க­ளிலும் பணியில் ஈடு­ப­டுத்த ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார்.

கொழும்பு நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், கம்­பஹா நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், களுத்­துறை நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும் கண்டி நிர்­வாக மாவட்டம், மாத்­தளை நிர்­வாக மாவட்டம், நுவ­ரெ­லியா நிர்­வாக மாவட்டம், காலி நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், மாத்­தறை நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், அம்­பாந்­தோட்டை நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­க­ளிலும் முப்­ப­டை­யினர் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுவர்.

மேலும், யாழ்ப்­பாணம் நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், கிளி­நொச்சி நிர்­வாக மாவட்டம், மன்னார் நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், வவு­னியா நிர்­வாக மாவட்டம், முல்­லைத்­தீவு நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், மட்­டக்­க­ளப்பு நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், அம்­பாறை நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், திரு­கோ­ண­மலை நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், குரு­நாகல் நிர்­வாக மாவட்டம், புத்­தளம் நிர்­வாக மாவட்­டமும் அதனை அண்­மித்­துள்ள ஆட்­புல நிலப்­ப­ரப்­புக்­களும், அநு­ரா­த­புரம் நிர்­வாக மாவட்டம், பொலன்­ன­றுவை நிர்­வாக மாவட்டம், பதுளை நிர்­வாக மாவட்டம், மொனராகலை நிர்வாக மாவட்டம், இரத்தினபுரி நிர்வாக மாவட்டம், கேகாலை நிர்வாக மாவட்டம் ஆகிய மாவட்டங்களிலும் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை என முப்படைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.