ஹஜ் கட்டணங்களை ஒழுங்குபடுத்த குழு

மர்ஜான் பளீல் தலைமையில் நியமனம்

0 691

ஹஜ் கட­மையை சாதா­ரண மக்­களும் நிறை­வேற்றும் வகையில் அதன் கட்­ட­ணங்­களை ஒழுங்­கு­ப­டுத்­து­மாறு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஹஜ் குழுத்­த­லைவர் மர்ஜான் பளீல் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கு வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ­வுக்கும் ஹஜ் குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை களுத்­துறை லாயா ஹோட்­டலில் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதே பிர­தமர் மேற்­கண்ட உத்­த­ரவை பிறப்­பித்­த­தாக ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

இது­தொ­டர்­பாக அவர் விப­ரிக்­கையில், எதிர்­வரும் ஹஜ் கட­மையை எந்­த­வித தடை­க­ளு­மின்றி மேற்­கொள்­வது தொடர்­பான கலந்­து­ரை­யாடல் ஒன்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் ஹஜ் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளுக்­கு­டையில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது, ஹஜ் விவ­காரம் தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் சவூதி அர­சாங்­கத்­துடன் இணைந்து இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்­டு­மென பிர­தமர் உறு­தி­யாக தெரி­வித்­தி­ருந்­தி­ருந்தார். 

ஹஜ் கட­மையை சில முக­வர்கள் வியா­பா­ர­மாக செய்து வரு­வதை தடுக்கும் வகையில் அர­சாங்கம் புதிய முறை­யொன்றை இந்­த­முறை கையா­ள­வுள்­ளது. சேவை­யாக மேற்­கொள்­ள­வேண்­டிய இக்­க­ட­மையை சிலர் இன்று வியா­பா­ர­மாக மாறி­யுள்­ள­தையும் பிர­தமர் இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் கூடுதல் கட்­ட­ணங்­களை அற­விட்டு மக்­களை அசௌ­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்­காமல், குறைந்த கட்­ட­ணத்தில் திருப்­தி­யான சேவையை மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் தெரி­வித்தார். மேலும் ஹஜ் கட்­ட­ணத்தை குறைத்து மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யொன்றை தனது அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு பிர­தமர் தனது அதி­கா­ரி­க­ளுக்கு விசேட உத்­த­ர­வொன்­றையும் பிறப்­பித்­துள்ளார்.

இதே­வேளை, சவூதி அரேபியாவுக்கு நேற்று இரவு புறப்பட்டுச்சென்ற இலங்கை ஹஜ் குழுவினர், ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சவூதி அரேபிய அமைச்சர் உட்பட உயர் மட்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.