மாலை­தீவு முன்னாள் அதிபர் நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை ரத்து

0 891

பயங்­க­ர­வாத வழக்கில் தொடர்­பு­ப­டுத்தி மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட 13 ஆண்டு சிறைத் தண்­ட­னையை அந்­நாட்டு உயர்­நீ­தி­மன்றம் ரத்துச் செய்­துள்­ளது.

மாலை­தீவு முன்னாள் அதிபர் முகம்­மது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்­நாட்டில் நடந்த முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜன­நா­யக முறைப்­படி மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் அதி­ப­ராவார்.  கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்­சியை அப்­துல்லா யாமீன் என்­ப­வ­ரிடம்  நஷீத், பறி­கொ­டுத்தார்.

அப்­துல்லா யாமீன் தலை­மை­யி­லான அரசு முஹம்­மது நஷீத் மீது பல்­வேறு வழக்­கு­களை தாக்கல் செய்­தது. தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி நீதி­ப­தியை கைது செய்­த­தாக தீவி­ர­வாத தடுப்பு சட்­டத்­தின்கீழ் தொட­ரப்­பட்ட வழக்கில் இவ­ருக்கு 13 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அவர் சிறையில் அடைக்­கப்­பட்டு, தண்­டனை அனு­ப­வித்து வந்தார்.

சிறை­வா­சத்­தின்­போது கடும் முது­கு­வ­லியால் சிறையில் அவ­திப்­பட்ட அவ­ருக்கு தண்டு வடத்தில் சத்­தி­ர­சி­கிச்சை செய்ய வேண்­டி­யுள்­ளது. அதற்­காக இங்­கி­லாந்தில் உள்ள வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற முடிவு செய்து அர­சிடம் அனு­மதி கேட்டார். அதற்கு மாலை­தீவு அரசு அனு­மதி மறுத்­து­விட்­டது. வெளி­நாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவ­ரது உற­வி­னர்கள் யாரா­வது உத்­த­ர­வாதம் அளித்தால் மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படுமென அரசு அறி­வித்­து­விட்­டது.

அவ­ரது நிலைமை மேலும் மோச­ம­டைந்­த­தை­ய­டுத்து சிகிச்­சைக்­காக நஷீத் வெளி­நாடு செல்ல அனு­ம­திக்­கு­மாறு மாலை­தீவு அர­சுக்கு அமெ­ரிக்கா, இந்­தியா மற்றும் இலங்­கையின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர்கள் வலி­யு­றுத்­தினர். இத­னை­ய­டுத்து, சிகிச்­சைக்­காக இங்­கி­லாந்து நாட்­டுக்குச் செல்ல அவ­ருக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது. கடந்த 2016  ஜன­வரி மாதம் சிகிச்­சைக்­காக இங்­கி­லாந்து செல்ல மால­தீவில் இருந்து முகம்­மது நஷீத் புறப்­பட்டுச் சென்றார். சிகிச்­சைக்கு பின்னர் அவர் மாலை­தீ­வுக்கு திரும்­பாமல் இலங்­கையில் அர­சியல் தஞ்சம் அடைந்தார்.

பின்னர் மாலை­தீவு அதிபர் பத­விக்கு செப்­டம்பர் 23 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலில் அப்­துல்லா யாமீன் தோல்­வி­ய­டைந்தார். புதிய அதி­ப­ராக இப்­ராஹிம் முஹம்­மது சாலிஹ் பத­வி­யேற்ற நிலையில் முகம்­மது நஷீத் சமீ­பத்தில் தாய்­நாடு திரும்­பினார். இந்­நி­லையில், தனக்கு விதிக்­கப்­பட்ட சிறைத் தண்­ட­னையை எதிர்த்து முன்னர் மாலை­தீவு  உயர் நீதி­மன்றில் முஹம்­மது நஷீத் வழக்குத் தொடர்ந்­தி­ருந்தார். இந்த வழக்கின் விசா­ர­ணைக்கு அவ­ரது சட்­டத்­த­ரணி ஹிஸான் ஹுஸைன்  ஆஜ­ராகி வந்தார். கடந்த திங்­க­ளன்று இவ்­வ­ழக்கில் தீர்ப்­ப­ளித்த நீதி­பதி முஹம்­மது நஷீ­துக்கு விதிக்­கப்­பட்ட 13 ஆண்டு சிறை­வா­சத்தை ரத்துச் செய்து உத்­த­ர­விட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.