நத்தாரை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டும்

பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

0 689

நத்தார் பண்­டி­கையை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து திருத்­த­லங்­க­ளுக்கும் தேவா­ல­யங்­க­ளுக்கும் விஷேட பாது­காப்பை வழங்­கு­மாறு தான் அர­சாங்­கத்­தி­டமும் பாது­காப்புத் துறை­யி­ன­ரி­டமும் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தா­கவும், அதற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

கொழும்பு பேராயர் இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அவர் மேலும் கூறு­கையில், பாது­காப்பு தொடர்பில் வேறு­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு தக­வல்­களும் அண்மைக் கால­மாக கிடைக்கப் பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. எனவே நாம் பாது­காப்­பாக இருக்க வேண்டும் என்று எண்­ணு­கின்றோம்.
மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும். எனவே அதற்­கேற்ற பாது­காப்பை அர­சாங்­கத்­திடம் கோரி­யி­ருக்­கின்றோம். எமது கோரிக்­கைக்கு ஏற்ப பாது­காப்பை வழங்­கு­வ­தாக இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள சகல தேவா­ல­யங்­க­ளிலும் திருத்­த­லங்­க­ளிலும் பாது­காப்பை எதிர்­பார்க்­கின்றோம். விஷே­ட­மாக நத்தார் தினத்­தன்று நள்­ளி­ரவு பூஜைகள் நடை­பெறும் தேவா­ல­யங்­க­ளிலும் திருத்­த­லங்­க­ளிலும் இந்த பாது­காப்பை பெற்றுக் கொடுக்க நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

ஏதே­னு­மொரு வகையில் மீண்­டு­மொரு தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என்ற ஐயப்­பாட்­டி­லேயே நத்தார் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு துறையிடமும் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.