பெளத்த மத சாசனத்தை பாதுகாத்தவரை அரசியல் பழிவாங்குவது கண்டிக்கத்தக்கது

ஹெல உறுமய உபதலைவர் எடிகல விமலதர்ம தேரர்

0 649

ஜன­நா­யகம், பொதுச் சட்டம் ஆகி­ய­வற்றை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ பின்­பற்­றினால் தான் ஆச்­ச­ரியம் கொள்ள வேண்டும். சர்­வா­தி­கா­ர­மாக பிர­யோ­கிக்­கப்­படும் அரச அதி­கா­ரத்­திற்கு ஒரு­போதும் அடி­ப­ணி­ய­மாட்டோம். தனி பௌத்த சிங்­கள மக்­க­ளினால் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி இன்று பௌத்த மத சாச­னத்தை பாது­காத்­த­வரை அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளமை பொது கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­னது என ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் உப­த­லைவர் எடி­கல விம­ல­தர்ம தேரர் தெரி­வித்தார்.

எதுல்­கோட்­டையில் உள்ள சோலிஸ் ஹோட்­டலில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் பொது விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­துடன் தவ­றான அர­சியல் கலா­சா­ரத்­தினை மாற்­றி­ய­மைப்­ப­தாக குறிப்­பிட்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான இடைக்­கால அர­சாங்­கத்தில் இன்று பார­தூ­ர­மான அள­விற்கு அர­சியல் பழி­வாங்­கல்கள் இடம் பெறு­கின்­றன.

ஜன­நா­யகம், பொது சட்­டங்­க­ளுக்கு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ மதிப்­ப­ளித்து செயற்­பட்டால் தான் ஆச்­ச­ரியம் கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவை கைது செய்­துள்­ளமை 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற முறை­யற்ற சர்­வா­தி­கார ஆட்­சியின் ஆரம்­ப­மா­கவே கருத முடியும்.

ஜன­நா­யக ரீதியில் கிடைக்கப் பெற்ற மக்­க­ளாணை 2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப்­ப­கு­தியில் முறை­கே­டாக பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அதன் கார­ண­மா­கவே நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னார்கள். மனம்­போன போக்கில் அரச தலை­வரால் அரச நிர்­வா­கத்தை முன்­னெ­டுக்க முடி­யாது. ஜன­நா­யக ஆட்சி சர்­வா­தி­கா­ர­மான முறைக்கு கொண்டு செல்­லப்­படும் போது நாட்டு மக்கள் சரி­யான பாடத்தை கற்­பிப்­பார்கள்.

முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்­டமை முற்­றிலும் சட்­ட­வி­ரோ­த­மா­னது. 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற வீதி விபத்­திற்கு முறை­யான விசா­ர­ணை­க­ளுக்கும், கிடைக்கப் பெற்ற சாட்­சி­யங்­க­ளுக்கும் அமைய நீதி­மன்றம் வழக்­கினை நிறைவு செய்­தது. தற்­போது ஆட்­சிக்கு வந்த ஒரு மாத காலத்­திற்குள் நீதி­மன்­றத்தில் எவ்­வி­த­மான அனு­ம­தியும் பெற்றுக் கொள்­ளாமல் வழக்­கினை மீளெ­டுத்து கைது செய்யும் அள­விற்கு கொண்டு சென்­றுள்­ள­மை­யினை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருக்­க­மாட்டோம்.

இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு எதி­ராக நீதித்­து­றையின் ஊடா­கவும், மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாகவும் நீதியினை பெற்றுக் கொள்வோம். தனி பௌத்த மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பௌத்த மத கோட்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும். மனம்போன போக்கில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க முடியாது என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.