ஹிஸ்புல்லாஹ்வின் பல்கலைக்கழகத்துக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துக

குற்றப்புலனாய்வு பிரிவிடம் அத்துரலிய ரதன தேரர் கோரிக்கை

0 852

ஹிஸ்­புல்­லாஹ்வின் மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரதன தேரர் இது தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்­புல்­லாஹ்வின் மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் இது­வ­ரையில் இடம்­பெற்­றுள்ள விசா­ர­ணைகள் தொடர்பில் ஆராய்ந்து, விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு அதி­கா­ரி­க­ளிடம் வேண்­டுகோள் விடுக்கும் நோக்கில் நேற்று புதன்­கி­ழமை நிதி குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு வருகை தந்­த­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இல­வ­ச­மாக தொழில்­நுட்ப கல்­வியை வழங்கும் நோக்கில் நிலத்தைப் பெற்றுக் கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்லா, ‘பெட்­டி­கலோ கெம்பஸ்’ தனியார் பல்­க­லைக்­க­ழ­க­மாக உரு­வாக்­கி­யுள்ளார்.

இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்­கு­வதன் ஊடாக பல சட்ட மீறல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இல­வச தொழில்­நுட்ப கல்­வியை வழங்­கு­வ­தாக கூறப்­பட்டு இந்த பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டாலும் தற்­போது கலைப் பீட­மாக அதனை மாற்றி இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கல்­வியைப் போதிக்கும் நிலை­ய­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­காக சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து பெருந்­தொ­கை­யான நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிதி­களை எந்த முறையில் பயன்­ப­டுத்­தி­னார்கள் என்­பது தொடர்­பிலும் இது­வ­ரையில் விளக்­க­மில்­லாமல் இருப்­ப­துடன், இவ்­வாறு நிதியை வழங்­கிய நிறு­வ­னங்­களின் நோக்கம் தொடர்­பிலும் ஆராய்ந்து பார்க்­க­வேண்டும்.

இந்­நி­லையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் எண்­ணத்­தி­லேயே சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இந்த நிதி வழங்­கப்­பட்­டி­ருக்கும் என்றே நாங்கள் கரு­து­கின்றோம்.

இவ்­வா­றான நிலையில் இந்த விசா­ர­ணை­களின் தற்­போ­தைய நிலை­கு­றித்து ஆராய்­வ­தற்­காக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வந்­த­போது, இங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட அதிகாரிகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நாங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று விசாரணை அதிகாரிகளை சந்தித்து , இந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.