பர்வேஷ் முஷாரப் மீதான மரண தண்டனை தீர்ப்பு

0 807

பாகிஸ்தான் முன்னாள் ஜனா­தி­ப­தியும் முன்னாள் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான ஜெனரல் பர்வேஷ் முஷா­ர­பிற்கு தேசத்­து­ரோக வழக்கு ஒன்றில் இஸ்­லா­மாபாத் விசேட நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்ள விவ­காரம் சர்­வ­தேச அரங்கில் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது. இத் தீர்ப்­பா­னது அண்மைக் காலங்­களில் அந்த நாட்டின் நீதித்­து­றை­யினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்­மா­னங்­களில் ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.

இரத்தம் சிந்­தாத சதிப்­பு­ரட்சி ஒன்றின் மூல­மாக 1999 ஆம் ஆண்டில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய முஷாரப் 2007 ஆம் ஆண்டில் அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தற்­காக பாகிஸ்­தானின் அர­சி­ய­ல­மைப்பின் 6 வது சரத்தின் ஏற்­பா­டு­களின் கீழ் தேசத்­து­ரோகக் குற்­ற­வா­ளி­யாகக் கரு­தப்­பட்டார். தனது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மாபெரும் போராட்­டங்கள் மூண்­ட­தை­ய­டுத்து நாட­ளா­விய ரீதியில் தனது எதி­ரி­களை களை­யெ­டுத்­த­துடன் முக்­கி­ய­மான அர­சியல் தலை­வர்­க­ளையும் வீட்­டுக்­கா­வலில் வைத்தார்.

அவர் மீது தேசத்­து­ரோக குற்­றஞ்­சு­மத்தி நவாஸ் ஷெரீப் அர­சாங்கம் 2013 ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்­தது. அந்த வழக்கின் விசா­ரணை ஆறு வருட கால­மாக நடை­பெற்­றது. இதன் பின்­ன­ணி­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­திலும் தலை­கீ­ழாகப் புரட்­டி­ய­திலும் முஷாரப் குற்­ற­வாளி என்று கூறி­யி­ருப்­ப­துடன் 1973 தேசத்­து­ரோக (தண்­டனை) சட்­டத்தின் கீழ் அதி­யு­யர்ந்த தண்­ட­னை­யையும் விதித்­தி­ருக்­கி­றது.

பாகிஸ்தான் வர­லாற்­றி­லேயே அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறி செயல்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷாரப் ஆவார். இந்த தீர்ப்­புக்கு எதி­ராக முஷா­ரஃப் மேல் முறை­யீடு செய்­யலாம் என்ற போதிலும் அதற்­காக அவர் பாகிஸ்­தா­னுக்கு திரும்பி நீதி­மன்­றத்­துக்கு நேர­டி­யாக வர வேண்டும் என்­பதும் அவ­சி­ய­மாகும். எனினும் அவர் இனிமேல் நாட்­டுக்கு வருவார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

பாகிஸ்­தானில் ஜன­நா­ய­கத்தை வலு­மைப்­ப­டுத்தும் ஒரு தொலை­தூர முயற்­சி­யாக இது அமையும் என்றும் எதிர்­கா­லத்தில் எந்த ஒரு இரா­ணுவத் தள­ப­தியும் இவ்­வாறு செயல்­ப­டு­வதை தடுக்கும் முயற்­சி­யா­கவும் இது பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் இந்த தீர்ப்பு பாகிஸ்­தானில் நீதித்­து­றைக்கு உள்ள சுதந்­தி­ரத்­தையும் காட்­டு­கி­றது என அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதற்­கி­டையில் பர்வேஸ் முஷாரப் எந்த தவறும் செய்­ய­வில்லை என பாகிஸ்தான் இரா­ணு­வத்தின் மக்கள் தொடர்பு அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. ‘‘முஷா­ர­புக்கு கொடுக்­கப்­பட்ட தண்­டனை மிகுந்த வலி­யையும், வேத­னை­யையும் தரு­கி­றது. 40 ஆண்­டு­காலம் நாட்­டுக்­காக உழைத்த அவர் துரோ­கி­யாக இருக்க முடி­யாது. பாகிஸ்தான் அர­ச­மைப்­பின்­படி உரிய நீதி வழங்­கப்­படும் என நம்­பு­கிறோம்‘‘ என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு பாகிஸ்­தானில் ஒரு­புறம் மகிழ்ச்­சி­யையும் மறு­புறம் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் நிலை­மைகள் குறித்து ஆராய்­வ­தற்­காக அந்­நாட்டு பிர­தமர் இம்ரான் கான் அவ­சர கூட்­டத்தைக் கூட்­டி­யுள்ளார். ஜெனீவா சென்­றி­ருந்த அவர் தனது பய­ணத்தை சுருக்கிக் கொண்டு நாட்டை வந்­த­டைந்­துள்ளார்.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­ன­ரான பாகிஸ்­தானின் அர­சியல் ஒரு­போதும் சுமு­க­மா­ன­தாக இருந்­த­தில்லை. தொடர்ச்­சி­யாக பல்­வேறு சவால்­களை அந்­நாட்டுத் தலை­வர்கள் சந்­தித்தே வந்­துள்­ளனர். படுகொலைகள், இராணுவ சதிப்புரட்சிகள், கைதுகள், தண்டனைகள் என அந்நாட்டு அரசியல் எப்போதும் கொந்தளிப்பாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது முன்னாள் தலைவர் ஒருவர் அதியுச்ச தண்டனையாக மரண தண்டனையைப் பெற்றிருக்கிறார். அத் தண்டனை நிறைவேற்றப்படுமாயின் நிச்சயம் அதுவும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகவே அமையும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.