ஹஜ் ஏற்பாடுகள் குறித்து பேச ஐவர் கொண்ட குழு சவூதி செல்கிறது

0 847

இலங்­கையின் 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கோட்டா மற்றும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் தூதுக்­குழு எதிர்­வரும் 23 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ண­மா­க­வுள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்­சரின் அழைப்பின் பேரில் பய­ண­மா­க­வுள்ள இக்­கு­ழு­வினை பிர­த­மரும், கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ நிய­மித்­துள்ளார்.ஐவர் கொண்ட இக்­கு­ழு­வுக்கு தலை­வ­ராக மர்ஜான் பளீல் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஏனைய உறுப்­பி­னர்­க­ளான கலா­சார அமைச்சின் முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான பிர­த­மரின் ஆலோ­சகர் நகீப் மெள­லானா, அப்துல் சத்தார் , மசூர் மெள­லானா, அஹ்கம் உவைஸ் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

சவூ­தியில் ஹஜ் அமைச்­ச­ருடன் இலங்கை ஹஜ் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தூதுக்குழு­வொன்­றினை அனுப்­பு­வ­தில்லை என கலா­சார அமைச்சு தீர்­மா­னித்­தி­ருந்த நிலையில் அத்­தீர்­மா­னத்தை மாற்றி தூதுக் குழு­வொன்­றினை அனுப்பி வைக்க பிர­த­மரும், கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தீர்­மா­னித்­துள்ளார்.

இக்­கு­ழு­வுடன் சவூ­தியில் இலங்கைத் தூது­வரும் கொன்­சி­யுலர் ஜென­ரலும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கோட்டா, முஅல்லிம் ஏற்­பா­டுகள், மக்கா, மதீனா போக்­கு­வ­ரத்­துகள், சவூதியில் தங்­கு­மிட வச­திகள் உட்­பட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இக்குழு தங்கியிருக்கும் காலத்தில் மக்காவுக்கும் மதீனாவுக்கும் விஜயம் செய்யவுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.