பதவி நீக்கியமைக்கு எதிராக பெளஸி உயர் நீதிமன்றில் வழக்கு

0 796

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் சிரேஷ்ட உப­த­லை­வரும், முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.பெளஸி ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் பதவி நீக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராகநேற்று உயர் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­துள்ளார்.

ஏ.எச்.எம்.பெளஸி தாக்கல் செய்­துள்ள மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன, பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒழுக்­காற்று குழு உறுப்­பி­னர்கள் என்போர் உட்­பட 13 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பி­ன­ரான ஏ.எச்.எம்.பெளஸி அமைச்­ச­ரா­கவும், சிரேஷ்ட அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­துள்ளார். கடந்த கால நல்­லாட்சி அர­சாங்கம் பிள­வு­பட்­ட­போது அவர் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வ­ளித்தார். இத­னை­ய­டுத்து அவர் கட்­சியின் விதி­களை மீறி­ய­மைக்­காக ஒழுக்­காற்று குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டார். விசா­ரணை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் அங்கு செல்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்தார். பொது­வான ஒரு இடத்­தி­லான விசா­ர­ணை­க­ளுக்கே தன்னால் சமு­க­ம­ளிக்க முடியும் எனத் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு அவரை அனைத்து பத­வி­க­ளி­லி­ருந்தும், கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்தும் நீக்கியுள்ளதாக கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்தே தனது பதவி நீக்கத்துக்கு எதிராக அவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.