4/21 தொடர் தற்கொலை தாக்குதல் விவகாரம்: மைத்திரி, ரணிலிடம் விசாரணை நடந்துக

சட்ட மா அதிபர் சி.ஐ.டி.க்கு ஆலோசனை ,முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமும் விசாரணை ,பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் வாக்குமூலம் பெற தீர்மானம் ,பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியலும் நீடிப்பு

0 708

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்துவாக்கு மூலம் பதிவு செய்­து­கொள்­ளு­மாறு சட்ட மா அதிபர் விசா­ரணை யாளர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போதே, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மேற்­படி விட­யத்தை அறி­வித்தார்.
இந் நிலையில் குற்­ற­வியல் பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகி­யோரின் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தே­க­ந­பர்கள் நேற்று கொழும்பு மேல­திக நீதவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்பட்ட போதே இதற்­கான உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

நேற்று இந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ‘‘முன்னாள் அமைச்­ச­ரான ரஞ்சித் மத்­தும பண்­டா­ர­வி­டமும் 2 முன்னாள் பொலிஸ்மா அதி­பர்கள் மற்றும் 4 பிரதி பொலிஸ்மா அதி­பர்­க­ளி­டமும் விசா­ர­ணைக்­கு­ழு­வினால் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் பல முன்னாள் அமைச்­சர்­களும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வாக்­கு­மூலம் பெறப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், இந்த சம்­பவம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரி­டமும் கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை, சில முன்னாள் அமைச்­சர்­க­ளிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­யு­மாறு குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­திற்கு சட்­டமா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.‘‘ என கூறினார்.

இந் நிலை­யி­லேயே இந்த விவ­கா­ரத்தின் சந்­தேக நபர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­ணான்டோ ஆகி­யோரின் விளக்­க­ம­றியல் நீடிக்­கப்ப்ட்­டது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் 250 இற்கும் அதி­க­மானோர் பலி­யா­கவும் பாரிய சொத்து சேதம் ஏற்­ப­டவும் உதவி ஒத்­தாசை புரியும் வகையில் செயற்­பட்­டுள்­ள­தாக கூறி தண்­டனை சட்டக் கோவையின் 250, 296, 298, 326,327,328, 329 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் இவர்கள் இருவரும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.