தேசத்­து­ரோ­க­மி­ழைத்­த­மைக்­காக முஷர்­ர­புக்கு மரண தண்­டனை

பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

0 683

இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள விசேட நீதி­மன்­ற­மொன்று பாகிஸ்­தானின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான ஜெனரல் பர்வேஸ் முஷர்­ர­புக்கு மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

பெஷாவார் உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி வகார் அஹமட் செத் தலை­மை­யி­லான மூன்று அங்­கத்­த­வர்கள் கொண்ட விசேட நீதி­மன்றமே தேசத்­து­ரோக வழக்கில் இத்­தீர்ப்பை வழங்­கி­யுள்­ளது.

முஷர்­ர­பினால் அவ­ச­ர­கால சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டமை மற்றும் 2007 ஆம் ஆண்டு அர­சியல் யாப்பை இடை­நி­றுத்­தி­யமை ஆகி­ய­வற்றின் கார­ண­மாக தேசத்­து­ரோகக் குற்­றச்­சாட்டு 2014 மார்ச் மாதம் அவர் மீது சுமத்­தப்­பட்­டது.
நவாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக் கட்சி 2003ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­த­போது முஷர்ரப் மீது இந்த வழக்கு தொடுக்­கப்­பட்­டது. அந்த வழக்கின் விசா­ரணை ஆறு வருட கால­மாக நடை­பெற்­றது. பாகிஸ்தான் அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தாக அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. பாகிஸ்தான் வர­லாற்­றி­லேயே அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறி செயல்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷர்ரப் ஆவார்

இரு தட­வைகள் பிர­த­ம­ராக இருந்த பெனாஸிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து பாகிஸ்­தானின் பயங்­க­ர­வாத ஒழிப்பு நீதி­மன்­றத்­தினால் 2017 ஆகஸ்ட் மாதம் நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டி­ய­வ­ராக முஷர்ரப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டார்.

இவ்­வ­ழக்கு தொடர்­பான முறைப்­பா­டுகள், பதி­வே­டுகள், விவா­தங்கள் மற்றும் உண்­மை­களை கடந்த மூன்று மாதங்­க­ளாக ஆராய்ந்த பின்னர், பாகிஸ்தான் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் 6ஆவது உறுப்­பு­ரைக்­க­மை­வாக உயர்ந்­த­ளவு தேசத்­து­ரோ­கத்தைப் புரிந்த குற்­ற­வா­ளி­யாக முஷர்ரப் காணப்­பட்­டுள்­ளா­ரென நேற்று குறித்த நீதி­மன்றம் வழங்­கிய குறு­கிய தீர்ப்பில் தெரி­வித்­துள்­ளது.

இது பெரும்­பான்மைத் தீர்ப்­பாகும். மூன்று நீதி­ப­தி­களுள் இருவர் முஷர்­ர­புக்கு எதி­ரா­கவே தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்­தனர்.

இந்த தீர்ப்­புக்கு எதி­ராக முஷர்ரப் மேல்­மு­றை­யீடு செய்­யலாம். ஆனால், மேல் முறை­யீடு செய்ய வேண்­டு­மானால் அவர் பாகிஸ்­தா­னுக்கு நாடு­தி­ரும்பி நீதி­மன்­றத்­துக்கு நேர­டி­யாக வர­வேண்டும்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பை மீறி­ய­தற்­காக இரா­ணுவத் தள­பதி ஒரு­வ­ருக்கு மரண தண்­டனை வழங்­கு­வது இதுவே முதல்­முறை. பாகிஸ்­தானில் ஜன­நா­ய­கத்தை வலி­மைப்­ப­டுத்தும் ஒரு தொலை­தூர முயற்­சி­யாக இது பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் எதிர்­கா­லத்தில் எந்த ஒரு இரா­ணுவத் தள­ப­தியும் இவ்­வாறு செயற்­ப­டு­வதைத் தடுக்கும் முயற்­சி­யா­கவும் இது பார்க்­கப்­ப­டு­கி­றது.
மேலும் இந்த முடிவு பாகிஸ்­தானில் நீதித்­து­றைக்­குள்ள சுதந்­தி­ரத்­தையும் காட்­டு­கி­ற­தென அர­சியல் ஆய்­வா­ளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத் தளபதியாகவிருந்த பர்வேஸ் முஷர்ரப் 1999 இல் இராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றினார். ஜூன் 2001 இல் பாகிஸ்தான் அதிபராக தன்னைப் பிரகடனம் செய்துகொண்டார். 2008 இல் தேர்தல் தோல்விக்குப்பின் நாட்டைவிட்டு அவர் வெளியேறினார்.-Vidivelli

  • எம்.ஐ.அப்துல் நஸார்

Leave A Reply

Your email address will not be published.