இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த போராட்டங்களின் எதிரொலி: ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

0 806

குடி­யு­ரிமைச் சட்டத் திருத்­தத்தைத் திரும்பப் பெறக்­கோரி கடந்த ஒரு வார­மாக இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில் தொடர் போராட்­டங்கள் நடந்து வரு­கின்­றன. அர­சியல் தலை­வர்கள், பொது­மக்கள் மாண­வர்கள் எனப் பல்­வேறு தரப்­பினர் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர். இதே கோரிக்­கையை வலி­யு­றுத்தி நேற்று முன்­தினம் மாலை டெல்லி ஜாமிஆ மில்­லியா இஸ்­லா­மியா (ஜே.எம்.ஐ) பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பேர­ணியில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது அவர்­களைத் தடுக்க முயன்ற காவ­லர்­க­ளுக்கும் மாண­வர்­க­ளுக்கும் இடையே தக­ராறு ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து பொலிஸார் தடி­யடி நடத்­தியும், கண்ணீர்ப் புகைக் குண்­டுகள் வீசியும் மாண­வர்­களைக் கலைத்­துள்­ளனர். மேலும் ஜே.எம்.ஐ. பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் நுழைந்தும் காவ­லர்கள் கண்ணீர்ப் புகைக்­குண்­டு­களை வீசி­யுள்­ளனர். இந்தச் சம்­பவம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பொலி­ஸா­ருக்கும் மாண­வர்­க­ளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 டெல்லிப் பேருந்­துகள் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன. மேலும், சில வாக­னங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தொடர்ந்து போராட்­டத்தில் ஈட்­டு­பட்ட 50 மாண­வர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஆனால் அமை­தி­யான முறையில் போராட்டம் நடத்­திய எங்கள் மீது தாக்­குதல் நடத்தி வன்­மு­றைக்கு வித்­திட்­டது காவ­லர்­கள்தான் என மாண­வர்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர். பொலிஸ் தடி­ய­டிக்குக் கண்­டனம் தெரி­வித்தும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­விக்கக் கோரியும் நேற்று முன்­தினம் இரவு டெல்லி பொலிஸ் தலைமை அலு­வ­லகம் முன்பு ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் திரண்டு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதை­ய­டுத்து கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விடு­விக்­கப்­பட்டு காய­ம­டைந்­த­வர்கள் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். டெல்­லியில் நடக்கும் மாண­வர்கள் போராட்­டத்­துக்கு ஆத­ர­வா­கவும் காவ­லர்­களின் தடி­ய­டிக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் உத்­த­ரப்­பி­ர­தேசம் , கேரளா போன்ற பல மாநி­லங்­களில் நேற்று முன்­தினம் இரவும் நேற்றும் மாண­வர்கள் போராட்டம் நடத்­தினர். மாண­வர்கள் போராட்­டத்தின் வீரி­யத்தைக் குறைக்கும் நோக்கில் தெற்கு டெல்லி முழு­வதும் உள்ள பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், சில மெட்ரோ ரயில் நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன.

மாண­வியின் வாக்­கு­மூலம்

இதற்­கி­டையில், நேற்று முன்­தினம் காவல்­து­றை­யினர் டெல்லி ஜாமியா மில்­லியா இஸ்­லா­மியா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் நுழைந்­த­போது அங்கு என்ன நடந்­தது என்­பதைப் பற்­றியும் தன் மன­நிலை குறித்தும் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கண்ணீர் மல்கத் தெரி­வித்­துள்ளார் ஜே.எம்.ஐ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஒரு மாணவி.

“நாங்கள் போராட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை, அமை­தி­யான முறையில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில்தான் இருந்தோம். ஆனால், அங்கு நுழைந்த காவ­லர்கள் கண்­மூ­டித்­த­ன­மாக எங்கள் மீது தடி­யடி நடத்­தினர். நாங்கள் வளா­கத்­தை­விட்டு வெளி­யே­று­வ­தற்­காக எங்கள் பைகளை எடுக்­கவே உள்ளே சென்றோம். எங்­களைக் குற்­ற­வா­ளி­களைப் போல காவல்­துறை நடத்­தி­யது. கல்­லூ­ரி­யி­லி­ருந்த உண­வகம், நூலகம் இன்னும் நிறைய வகுப்­ப­றைகள் போன்ற அனைத்­தையும் சேதப்­ப­டுத்­தி­விட்­டனர். இதற்கும் மேலாகப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்த பள்­ளி­வா­ச­லுக்­குள்ளும் காவ­லர்கள் நுழைந்து அங்கு பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்­களைத் துன்­பு­றுத்­தி­னார்கள். தங்­களைப் பாது­காத்­துக்­கொள்ள சில மாண­வர்கள் கல்­லூ­ரியின் அடித்­த­ளத்தில் (basement) பதுங்­கி­யி­ருந்­தனர். நேற்று இரவு நாங்கள் கண்ட காட்சி மிகவும் பயங்­க­ர­மாக இருந்­தது. வளா­கத்­தி­லி­ருந்த மின் விளக்­குகள் அணைக்­கப்­பட்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. என் நண்­பர்கள் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.
மாண­வர்­க­ளுக்கு மிகவும் பாது­காப்­பான இடம் கல்­லூரி வளாகம் என நினைத்­தி­ருந்தோம். அதனால் எங்­க­ளுக்கு எந்­த­வித அசம்­பா­வி­தமும் நேராது என நான் நம்­பிக்­கொண்­டி­ருந்தேன். ஆனால், இன்று அனைத்தும் பொய்­யா­கி­விட்­டது. நேற்று இரவு முழு­வதும் நாங்கள் அழு­து­கொண்­டி­ருந்தோம். இப்­போதும் அழு­கிறோம். என்ன நடக்­கி­றது என்றே புரி­ய­வில்லை.

இந்த மொத்த நாட்­டிலும் நான் பாது­காப்­பாக இருப்­ப­தாக உண­ர­வில்லை. இனிமேல் நாங்கள் வேறு எங்கு செல்­வது என்றும் தெரி­ய­வில்லை. எங்கு சென்­றாலும் தாக்­குதல் நடக்­கி­றது. நாளை என் நண்­பர்கள் இந்­தியக் குடி­மக்­க­ளாக இருப்­பார்­களா என்­பது சந்­தே­க­மாக உள்­ளது. நான் இஸ்­லா­மியப் பெண் கிடை­யாது, இருந்தும் போரா­டு­கிறேன். உண்­மையின் பக்கம் நிற்­காமல் போனால் நான் படித்த கல்வி அர்த்­த­மற்­ற­தா­கி­விடும்” என அழு­த­வாறே ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­துள்ளார்.

மாண­வியைத் தொடர்ந்து பேசிய மற்­றொரு மாணவர், “கல்­லூ­ரிக்குள் கல­வரம் வெடிக்­கும்­போது நாங்கள் நூல­கத்­தி­லி­ருந்தோம். வளா­கத்­துக்குள் நிலைமை மிகவும் மோச­மாக இருப்­ப­தாக நண்­பர்கள் எங்­க­ளுக்கு போனில் தெரி­வித்­தனர். நாங்கள் நூல­கத்தை விட்டு வெளி­யே­றலாம் என முடி­வெ­டுத்துச் சென்றோம். அப்­போது மொத்த மாண­வர்­களும் உள்ளே வந்­து­விட்­டனர்.

அடுத்த 30 நிமி­டங்­களில் நூலகம் நிரம்­பி­யது. பின்னர் நாங்கள் கைகளைத் தூக்­கி­ய­வாறே வெளியில் நடந்து சென்றோம். இறு­தியில் எங்கள் விடு­திக்குச் சென்­று­விட்டோம். அப்­போது சக மாணவர் ஒருவர் ஓடி வந்து, “பெண் காவ­லர்கள் விடு­திக்குள் நுழைந்­துள்­ளார்கள். அவர்கள் நம்மைத் தாக்­கு­வ­தற்­காக வரு­கி­றார்கள்” எனத் தெரி­வித்தார். உட­ன­டி­யாக நாங்கள் அங்­கி­ருந்த புத­ருக்குள் சென்று மறைந்­து­கொண்டோம். நள்­ளி­ரவு சத்தம் சற்று அடங்­கி­யது. மீண்டும் எங்கள் விடு­திக்குத் திரும்­பினோம். ஆனால் அங்கு என் நண்­பர்கள் பலர் ரத்த வெள்­ளத்தில் கிடந்­ததைப் பார்த்தேன்” என்று தெரி­வித்­துள்ளார்.
மாண­வர்கள் கல்­லூ­ரிக்குள் தாக்­கப்­பட்ட விவ­காரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொரு­ளாக மாறி­யுள்­ளது.

பிர­தமர் மோடி கருத்து

குடி­யு­ரிமை திருத்தச் சட்டம் தொடர்­பான வன்­முறைப் போராட்­டங்கள் துர­தி­ஷ்­ட­வ­ச­மா­னவை, ஆழ­மான வருத்­தத்தை தரு­பவை என்று பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்­டரில் தெரி­வித்­துள்ளார்.

“விவாதம், உரை­யாடல், மாறு­பாடு ஆகி­யவை ஜன­நா­ய­கத்தின் அவ­சி­ய­மான அம்­சங்கள். ஆனால், பொதுச் சொத்­துக்கு சேதம் விளை­வித்தல், சகஜ வாழ்க்­கையை கெடுத்தல் ஆகி­யவை நமது விழு­மி­யங்­களில் இல்லை” என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பேருந்­து­க­ளுக்கு பொலி­சாரே தீவைப்­பது போல காட்டும் வீடி­யோக்கள் வெளி­யா­வது குறித்தோ, பொலிசார் மாண­வர்கள் மீது தடி­யடி நடத்­தி­யது குறித்தோ அவர் எந்தக் கருத்தும் தெரி­விக்­க­வில்லை.

தொடரும் போராட்­டங்கள்

ஞாயிற்­றுக்­கி­ழமை ஜாமிஆ பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலை கண்­டித்து நேற்று இந்­தியா முழு­வதும் போராட்­டங்கள் நடை­பெற்­றன.

நேற்றுக் காலையில் லக்னோ நட்வா கல்­லூரி மாண­வர்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

லக்னோ மாணவர் போராட்­டங்கள் குறித்து பொலிஸ் கண்­கா­ணிப்­பா­ள­ரான கலா­நிதி நைதானி கூறு­கையில், கிட்­டத்­தட்ட 30 வினா­டிகள் அள­வுக்கு கல்­லெறி சம்­ப­வங்கள் நடந்­தன. ஏறக்­கு­றைய 150 பேர் இந்தப் போராட்­டத்­துக்கு வந்து கோஷங்கள் எழுப்­பினர். தற்­போது மாண­வர்கள் வகுப்­ப­றை­க­ளுக்கு திரும்பி கொண்­டி­ருக்­கின்­றனர்’ என்று கூறினார்.

இதேபோல் குடி­யு­ரிமை சட்டத் திருத்த மசோ­தா­விற்கு எதிர்ப்பு தெரி­வித்து புதுச்­சேரி மத்­திய பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாண­வர்கள் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
வழக்கு தொட­ருவோம்

டெல்லி ஜாமிஆ மில்­லியா இஸ்­லா­மியா பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் போராட்டம் மற்றும் பொலி­சாரின் நட­வ­டிக்­கை­களை குறித்து நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பொலிசார் நுழைந்ததற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடரவுள்ளோம். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து வளாகத்தை புதுப்பிக்கமுடியும். ஆனால் மாணவர்களுக்கு நிகழ்ந்ததை நீங்கள் சரிசெய்ய முடியாது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ”நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அளவு விசாரணை நடத்த நாங்கள் கோரிக்கை வைப்போம்” என்றார்.

”மாணவர்கள் நடத்தப்பட்ட விதத்தை கண்டு நான் வேதனை அடைகிறேன். இந்த போராட்டத்தில் மாணவர்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை இந்நேரத்தில் தெரியப்படுத்துகிறேன். நானும் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.