ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை போராட்டம் தொடரும்

முன்னாள் நீதி­ய­மைச்சர் தலதா சூளுரை

0 853

நாட்டை சர்­வா­தி­கார முறை­மைக்கு இட்­டுச்­செல்லும் நிலையை தகர்த்து   ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டும் வரை எமது போராட்டம் தொட­ரு­மென முன்னாள் நீதி­ய­மைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தலதா அத்­துக்­கோ­ரல தெரி­வித்தார். தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை­யி­லி­ருந்து ஜன­நா­ய­கத்தை பாது­காப்­ப­தற்­கா­கவே சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில் கலந்து கொண்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில்  கடந்த 8 நாட்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தில் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தலதா அத்­துக்­கோ­ரல, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ராணி பண்­டார, ஜக்­கிய தேசியக் கட்­ட­சியின் மகளிர் அமைப்­பினர் மற்றும் தொழிற்­சங்­கங்­களும் கலந்து கொண்­டி­ருந்­தன. இதன் போதே தலதா அத்­துக்­கோ­ரல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதன் போது அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டியின் கார­ண­மாக நாட்டின்  சாதா­ரண நிலை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஜன­நா­யகம் அழிக்­கப்­பட்டு சர்­வா­தி­காரம் உரு­வாக  வழி­கோலும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான நாட்டின் சட்ட ஒழுங்­கிற்கும், அர­சியல் யாப்­பிற்கும் விரோ­த­மான செயற்­பா­டு­களின் கார­ண­மா­கவே  இத்­த­கைய நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் நாட்டின் ஜன­நா­யகம் அதல  பாதா­ளத்­தினுள்   செல்லும் துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவற்றை கருத்­திற்­கொண்டு நாட்டின் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட ஜக்­கிய தேசியக் கட்­சியின் மகளிர் அமைப்­பி­ன­ரான அனை­வரும் சத்­தி­யாக்­கி­ர­கத்தில் பங்கு கொண்­டுள்­ள­தா­கவும் அதன் மூலம் தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள  நீதிக்குப் புறம்பான செயல்கள் தகர்க்கப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரையில் தொடர்ச்சியாகத்   தமது  எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.