டுபாயில் கைதான இலங்கையர் மூவரின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

ஓமல்பே சோபித தேரர்

0 1,026

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வா­தி­களின் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட டுபாயில் பணி­பு­ரியும் மூன்று இலங்­கை­யர்­க­ளுக்கு எதி­ராக அந்­நாட்டில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இலங்கை அர­சாங்கம் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு உயிர் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்டும் என கலா­நிதி ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்­துள்ளார்.

எல்­பி­லி­பிட்­டி­யவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது. இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் சில கருத்­துக்­களைப் பதி­வு­செய்த டுபாயில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாகப் பணி­பு­ரியும் மூன்று இலங்­கை­யர்­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸாரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் 22 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. என ஊட­கங்கள் வாயி­லாக அறி­யக்­கி­டைத்­தது.

இந்த தாக்­குதல் அப்­பாவி மக்கள் மீதே மேற்­கொள்­ளப்­பட்­டது. சமா­தா­னத்தை விரும்பும் உலக மக்கள் அனை­வரும் இதனை எதிர்த்­தனர். இந்த மூன்று இலங்­கை­யர்­களும் வெளி­யிட்ட கருத்­துக்­களும் சாதா­ர­ண­மா­னவை.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவோ இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவோ நாமும் அந்த மூன்று இலங்­கை­யர்­களும் கருத்­து­வெ­ளி­யி­ட­வில்லை. சம­யத்தின் பெயரால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வா­தத்­தையே அவர்கள் எதிர்த்­தார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு எதி­ராக வெளி­யிட்ட கருத்­துக்கள் இஸ்­லாத்­துக்கு எதி­ரான கருத்­தாக எவரும் கரு­தக்­கூ­டாது.

வழக்கின் தீர்ப்பு எவ்­வாறு அமையும் என எம்மால் கூற­மு­டி­யாது. என்­றாலும் அர­சாங்கம் என்ற வகையில் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யி­டலாம். டுபா­யி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்­டுள்­ள­தாக நான் அறி­கிறேன். டுபாயில் பணி­பு­ரியும் மூவரும் இலங்­கையில் ஏழைக்­கு­டும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். அவர்கள் தங்கள் குடும்­பத்தைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக அந்­நாட்­டுக்குச் சென்­றுள்­ள­வர்கள். எமக்கு அந்­நிய செலா­வ­ணியைப் பெற்றுத் தரு­ப­வர்கள். இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்குப் பங்­க­ளிப்­புச்­செய்யும் இவர்கள் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும்.

டுபா­யி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரிகள் இவர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்ப்பு கிடைக்­கப்­பெ­று­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்டும். அமெ­ரிக்­காவில் அல்­கைதா தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் போதெல்லாம் உலக முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­களும் எதிர்ப்பு வெளியிட்டார்கள். அது போன்ற ஒரு தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போது அதனை எதிர்த்தமை தவறல்ல. அவ்வாறு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் வராத வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.