13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு 251 பதக்கங்கள்

8 முஸ்லிம் வீர, வீராங்கனைகளில் 7 பேருக்கு வெண்கலப் பதக்கங்கள்

0 1,230

நேபா­ளத்தின் தலை­நகர் கத்­மண்டு மற்றும் பொக்­க­ராவில் கடந்த பத்து நாட்­க­ளாக நடை­பெற்று வந்த 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா, கடந்த 10ஆம் திகதி நிறை­வுக்கு வந்­தது. இவ்­வி­ழாவில் இலங்கை 40 தங்­கப்­ப­தக்­கங்கள் அடங்­க­லாக 251 பதக்­கங்­களை வெற்­றி­கொண்டு 3ஆம் இடத்தைத் தன­தாக்கி, நேற்­று முன்தினம் நள்­ளி­ரவு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­னூ­டாக தாயகம் வந்­த­டைந்­தது.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை இடம்­பெற்­று­வரும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் 13ஆவது அத்­தி­யாயம் கடந்த முதலாம் திகதி மிகக் கோலா­க­ல­மான முறையில் நேபா­ளத்தின் தலை­நகர் கத்­மண்டு மற்றும் பொக்­க­ராவில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இதில் தெற்­கா­சி­யாவில் அங்கம் பெற்­றுள்ள 8 நாடு­களில் ஆப்­கா­னிஸ்தான் தவிர்ந்த மிகுதி 7 நாடு­களும் பங்­கேற்­றி­ருந்­தன. அந்­த­வ­கையில் 26 வகை­யான விளை­யாட்­டுக்­களை மையப்­ப­டுத்தி, 316 தங்­கப்­ப­தக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, 2712 வீர, வீராங்­க­னைகள் இவ்­வி­ளை­யாட்டு விழாவில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

நாடு­களின் வீர, வீராங்­க­னைகள் தொகை

நடப்­பாண்டின் 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் மொத்­த­மாக 2712 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர். இதில், அதி­கப்­ப­டி­யான போட்­டி­களை நடாத்­திய நேபா­ளி­லி­ருந்து மொத்­த­மாக 569 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர். அதற்கு அடுத்­த­ப­டி­யாக இலங்­கை­யி­லி­ருந்து 564 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர். குறிப்­பாக, இலங்­கையைப் பொறுத்­த­வரை கடந்­த­கால தெற்­கா­சிய விளை­யாட்டு விழாக்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் அதி­கப்­ப­டி­யான வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர். மேலும், இந்­தி­யா­வி­லி­ருந்து 487 வீர, வீராங்­க­னை­களும், பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து 470 வீர, வீராங்­க­னை­களும், பாகிஸ்­தா­னி­லி­ருந்து 263 பேரும், மாலை­தீ­வு­களில் இருந்து 216 பேரும் மற்றும் பூட்­டா­னி­லி­ருந்து 116 பேரும் என மொத்­த­மாக 2712 வீர, வீராங்­க­னைகள், 316 தங்­கப்­ப­தக்­கங்­களைக் குறி­வைத்துக் களம் கண்­டி­ருந்­தனர்.

இலங்கை சார்பில் பங்­கேற்ற வீர, வீராங்­க­னைகள்

13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்­கேற்ற 564 வீர, வீராங்­க­னை­களில், இவ்­வி­ளை­யாட்டு விழாவின் பிர­தா­ன­மான விளை­யாட்­டான மெய்­வல்­லுநர் போட்டி நிகழ்ச்­சிக்கு 58 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருந்­தனர். மேலும், மிகுதி 25 குழு மற்றும் தனி விளை­யாட்­டு­க­ளுக்கும் சேர்த்து 506 வீர, வீராங்­க­னைகள் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­தனர். இதில் இலங்கை மெய்­வல்­லுநர் ஆண்கள் அணியின் தலை­வ­ராக ஈட்டி எறிதல் வீர­ரான சுமேத ரண­சிங்­கவும், பெண்கள் அணியின் தலை­வி­யாக 800 மீற்றர் ஓட்டப் போட்­டியின் தேசிய சம்­பி­ய­னான வீராங்­க­னை­யான நிமாலி லிய­னா­ராச்­சியும் நிய­மிக்­கப்­படனர்.

மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இரண்டு முஸ்­லிம்கள்

இலங்கை சார்பில் மொத்தம் 564 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­றி­ருக்க, அதில் 8 வீர, வீராங்­க­னைகள் முஸ்­லிம்­க­ளாவர். அந்­த­வ­கையில், இவ்­வி­ளை­யாட்டு விழாவின் முக்­கிய போட்­டி­யான மெய்­வல்­லுநர் நிகழ்வில் போட்­டி­யிட்­டி­ருந்த 58 வீர வீராங்­க­னை­களில், முப்­பாய்ச்சல் போட்­டி­களின் தேசிய சம்­பி­ய­னான சப்ரின் அஹமட் மற்றும் அண்­மைக்­கா­ல­மாக தேசிய மட்ட குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் அசத்தி வரு­கின்ற மொஹமட் சபான் ஆகிய இரு­வ­ருமே 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் மெய்­வல்­லுநர் நிகழ்வில் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த முஸ்­லிம்­க­ளாவர்.

தனி மற்றும் குழு போட்டி நிகழ்வில் 6 முஸ்லிம் வீர, வீராங்­க­னைகள்

இவ்­வி­ளை­யாட்டு விழாவில் மகளிர் ஜூடோ 63கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் ஹப்ஸா யமீனா ரிபாஸ் மற்றும் ஆண்கள் ஜூடோவின் 100 கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் ஒஸ்மான் முஹம்மட் இர்­பானும் இடம்­பெற்­ற­ருந்­தனர். மேலும், மக­ளி­ருக்­கான ஸ்குவாஷ் போட்­டியில் ஸலீஹா இஸ்­ஸதீன் மற்றும் ஸமீரா ருக்­ஸானா டீன் ஆகி­யோரும் இலங்­கையப் பிர­தி­நி­தித்­துவம் செய்­தி­ருந்­தனர். அதே­போன்று, ஆண்­க­ளுக்­கான ஸ்குவாஷ் போட்­டியில் மொஹம்மட் ஸாமில் வக்கீல் மற்றும் ஷரீப் மொஹம்­மது ஹக்கீம் அடங்­க­லாக மொத்தம் 6 வீர, வீராங்­க­னைகள் இத்­தொ­டரில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

ஆடவர் உதை­பந்­தாட்ட அணியில் தலை­வ­ராக மொஹமட் பசால்

இம்­முறை 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஓர் அங்­க­மான, ஆடவர் உதை­பந்­தாட்டத் தொடரில் 23வய­துக்­குட்­பட்ட அணியே பங்­கேற்­றி­ருந்­தது. இதற்­காகப் பங்­கேற்ற இலங்கை ஆடவர் உதை­பந்­தாட்ட அணியை இலங்கை தேசிய உதை­பந்­தாட்ட அணியின் தலை­வ­ரான மொஹமட் பசால் வழி­ந­டாத்­தி­யி­ருந்தார். இத்­தொ­ட­ருக்­கென அறி­விக்­கப்­பட்ட 20 வீரர்­களில் 6 வீரர்கள் முஸ்­லிம்­க­ளாவர். அந்­த­வ­கையில், மொஹமட் ஆகிப், மொஹமட் இஷான், மொஹமட் முஷ்தாக், மொஹமட் ஷஹீல் மற்றும் அமான் பைசர் இவர்­க­ளுடன் அணித்­த­லைவர் மொஹமட் பசால் ஆகி­யோரே இத்­தொ­டரில் பங்­கேற்­றி­ருந்­தனர். இவ்­வ­ணியின் பயிற்­று­விப்­பா­ள­ராக இலங்கை தேசிய உதை­பந்­தாட்ட அணியின் பயிற்­று­விப்­பா­ள­ரான பக்கீர் அலி செயற்­பட்­டி­ருந்­தமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

முதல் சர்­வ­தேச போட்­டியில் பதக்கம் வென்றார் சப்ரின்

தேசிய மட்டப் போட்­டி­களில் ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில், இலங்கை இரா­ணு­வத்­துக்­காக விளை­யாடி வரு­கின்ற 27 வயது நிரம்­பிய இளம் துடிப்­பு­மிக்க வீர­ரான, வெலி­க­மையைச் சேர்ந்த சப்ரின் அஹமட் முதல் முறை­யாக சர்­வ­தேச விளை­யாட்டு விழாவில் பங்­கேற்­றி­ருந்தார். அண்­மைக்­கா­ல­மாக தேசிய மட்ட போட்­டி­களில் வெற்­றி­களைப் பெற்று வரு­கின்ற இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற 97ஆவது தேசிய மெய்­வல்­லுநர் சம்­பி­யன்­ஷிப்பில் ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்சல் போட்­டியில் 16.33 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்­றதன் மூல­மாக 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பங்­கேற்­ப­தற்­கான வாய்ப்பை பெற்­றுக்­கொண்டார். அதற்­க­மைய, கடந்த 5ஆம் திகதி இடம்­பெற்ற முப்­பாய்ச்சல் போட்­டி­களில் தேசிய சம்­பி­ய­னான சப்ரின் அஹமட் ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் 15.95 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து, தனது முதல் சர்­வ­தேச போட்­டியில் வெண்­கலப் பதக்­கத்தை இலங்­கைக்கு வென்­று­கொ­டுத்தார். இப்­போட்­டியில் இலங்­கையின் தேசிய சாத­னைக்கு சொந்­தக்­கா­ர­ரான கிரேஷன் தனஞ்­சய 15.91 மீற்றர் தூரம் பாய்ந்து நான்­கா­வது இடத்தைப் பெற்றுக் கொண்­டமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

200 மீற்­றரில் மொஹமட் சபா­னுக்கு ஏமாற்றம்

13ஆவது தெற்­கா­சிய விளையாட்டு விழாவின் மெய்­வல்­லுநர் போட்டி நிகழ்ச்­சி­களில் மிக­முக்­கிய ஒன்­றான ஆட­வ­ருக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில், அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையின் தேசிய மட்ட குறுந்­தூர ஓட்டப் போட்­டி­களில் அசத்தி வரு­கின்ற மொஹமட் சபான் இலங்கை சார்பில் பங்­கேற்­றி­ருந்தார். இலங்­கைக்கு பதக்­க­மொன்றைப் பெற்றுத் தரு­வா­ரென மிகவும் எதிர்­பார்க்­கப்­பட்ட இவர், கடந்த 4ஆம் திகதி தனது போட்டி நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்தார். இப்­போட்­டியில், இலங்­கையர் அனை­வர்­க­ளி­னதும் எதிர்­பார்ப்பை மீறி, மொஹமட் சபா­னினால் போட்டித் தூரத்தை 22.29 செக்­கன்­களில் நிறைவு செய்து, 8ஆவது இடத்­தையே பெற்றுக் கொள்ள முடிந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஹப்ஸா யமீ­னா­வுக்கும், மொஹம்மட் இர்­பா­னுக்கும் வெண்­கலம்

இவ்­வி­ளை­யாட்டு விழாவின் தனி நபர் போட்­டி­களில் முக்­கி­ய­மான ஒன்­றாக ஜூடோ போட்­டிகள் அமை­யப்­பெற்­றன. அந்­த­வ­கையில், மக­ளி­ருக்­கான 63 கிலோ கிராம் எடைப்­பி­ரிவில் நாவ­லப்­பிட்­டியை சேர்ந்த 18 வயது நிரம்­பிய பாட­சாலை மாண­வி­யான ஹப்ஸா யமீனா ரிபாஸ் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இப்­போட்­டியில், தனது சிறந்த திற­மையை வெளிப்­ப­டுத்­திய ஹப்ஸா யமீனா அரை­யி­றுதி ஆட்­டத்தில் நேபாள் வீராங்­க­னை­யிடம் தோற்ற போதிலும், மூன்றாம் இடத்­துக்­கான போட்­டியில் பங்­க­ளாதேஷ் வீராங்­க­னையை இல­கு­வாக வீழ்த்தி வெண்­க­லப்­ப­தக்­கத்தை வென்று, முதல் சர்­வ­தேச பதக்­கத்தைப் தன­தாக்­கினார். இவர் ஆரம்பக் கல்­வியை சென். ஜோசப் மகளிர் கல்­லூ­ரியில் பயின்று, தற்­ச­மயம் உயர்­தரக் கல்­வியை கண்டி மகளிர் தேசிய கல்­லூ­ரியில் பயின்று வரு­கின்றார். இவர் ரிபாஸ் – தஸ்­கியா தம்­ப­தி­களின் புதல்­வி­யாவார்.

மேலும், அன்­றைய தினம் இடம்­பெற்ற ஆண்­க­ளுக்­கான 100 கிலோ­கி­ரா­மிற்கு அதி­க­மான எடைப்­பி­ரிவில் நாவ­லப்­பிட்­டியை சேர்ந்த, ஒஸ்தான் மொஹம்மட் இர்பான் இலங்கை சார்பில் போட்­டி­யிட்­டி­ருந்தார். இப்­போட்டி நிகழ்வில் தனது முழுத் திற­மை­யையும் வெளிப்­ப­டுத்­திய மொஹம்மட் இர்பான், 3ஆவது இடத்­தைப்­பெற்று இலங்­கைக்கு வெண்­க­லப்­ப­தக்­கத்தை பெற்றுக் கொடுத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவர் நாவ­லப்­பிட்டி அநு­ருத்த தேசிய கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ராவார். இவர், தற்­ச­மயம் இலங்கை விமானப் படையின் ஜூடோ பிரிவில் பயிற்­சி­களை மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.
ஸ்குவாஷ் போட்­டி­யிலும் வெண்­க­லப்­ப­தக்­கங்கள்

சர்­வ­தேச மட்­டங்­களில் புகழ்­பெற்ற விளை­யாட்­டான ஸ்குவாஷ் போட்டி, 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­விலும் இடம்­பெற்­றி­ருந்­தது. இதில், மகளிர் பிரிவில் இலங்­கையைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த வீராங்­க­னைகள் வெண்­க­லப்­ப­தக்­கத்தை தம­தாக்­கி­யி­ருந்­தனர். இதில் பத்தூம் ஸலீஹா இஸ்­ஸதீன் மற்றும் ஸமீரா ருக் ஷானா டீன் ஆகி­யோ­ருடன், மிஹி­லியா மெத்­ஸ­ரனி மற்றும் யெஹேனி வொனாரா ஆகியோர் இவ் வெண்­க­லப்­ப­தக்­கத்தை வெற்­றி­கொண்ட இலங்கை அணியில் அங்கம் பெற்­றி­ருந்­தனர்.

அதேபோல், ஆடவர் இலங்கைக் குழாமும் ஆண்கள் பிரிவின் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்திருந்தது. இக்குழாத்தில் மொஹம்மட் ஸாமில் வக்கீல் மற்றும் ஷரீப் மொஹம்மது ஹக்கீம் ஆகிய இரு முஸ்லிம் வீரர்களுடன் சேர்த்து, ரவிந்து ஹசிந்த மற்றும் டுருன்வின்க மனூர ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர்.

குறிப்பாக இந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், இலங்கைக்குப் பதக்கங்களை வென்று கொடுத்தவர்களுக்கும், மேலும் இப்போட்டியில் பங்கேற்ற 8 முஸ்லிம் வீர, வீராங்கனைகளுக்கும் அதி லும், இலங்கைக்காக பதக்கங்களை வென்று கொடுத்த 7 வீர, வீராங்க னைக ளுக்கும் வாழ்த்துக் களைத் தெரிவிப் பதுடன், எதிர்கா லத்தில் சர்வ தேச மட்டத்திலும் இவர்கள் பிரகாசித்து சர்வதேச போட்டி களில் இலங்கைக்கு பதக் கங்களுடன், புக ழையும் தேடிக் கொடுக்க வேண்டும் என, எமது பத்திரி கையின் சார்பாக வாழ்த்துக் களையும் பாரா ட்டுக் களையும் தெரி வித்துக் கொள் கின் றோம்.-Vidivelli

  • பஹர்தீன் அரபாத்

Leave A Reply

Your email address will not be published.