சிறு­மியின் உயி­ரி­ழப்­புக்கு கார­ண­மான அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

0 1,480

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் கவ­னக்­கு­றைவால் சிறுமி ஒருவர் உயி­ரி­ழந்­தி­ருக்­கிறார் என்­பதை அறி­ய­மு­டி­கி­றது. குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஞான­முத்து ஸ்ரீநேசன் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு மேலும் தெரி­வித்த அவர்,

நான் அறிந்­த­வ­ரையில் மருந்தின் அளவு 2 மில்லி லீற்றர் ஏற்­றப்­ப­டு­வ­தற்கு பதி­லாக 20 மில்லி லீற்றர் ஏற்­றப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
வைத்­தியர் அதனை குறித்த விதமும், மருந்­தினை ஏற்­றி­ய­வரின் கவனக் குறைவும் உயி­ரி­ழப்­புக்­கான கார­ண­மாக அமைத்­தி­ருக்­கி­ற­தெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மனித உயி­ரா­னது மிகவும் பெறு­ம­தி­யா­னது, அதனைப் பாது­காப்­பது கட்­டா­ய­மா­னது.

இது தொடர்­பாக சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. சம்­பந்­தப்­பட்ட வைத்­தி­யரும் சட்­டத்­த­ரணி வாயி­லாக நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கி­றது.

தவறு செய்­ப­வர்கள் அவர்கள் மருத்­து­வ­ராக இருந்­தாலும் சரி, அர­சி­யல்­வா­தி­யாக இருந்­தாலும் சரி சட்­டத்தின் முன் யாவரும் சம­மா­ன­வர்கள் என்ற தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் தண்­டிக்­கப்­பட வேண்டும்.

வைத்­தி­ய­சாலைப் பணிப்­பாளர் ஊடக சந்­திப்­பினை மேற்­கொண்­டதை நானும் அவ­தா­னித்தேன். இது தொடர்­பான முறைப்­பாடு சுகா­தார அமைச்­சிடம் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. நானும் தொடர்­பு­கொண்டு இது தொடர்­பாக வின­வி­ய­போது அந்த தக­வல்­களைப் பெறக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இந்த உயி­ரி­ழப்பு வெளிப்­ப­டை­யாகத் தவ­றென ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. வைத்­தி­யரின் தவறு கார­ண­மா­கத்தான் மாணவி கொல்­லப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பது வெளி­யா­கி­யுள்­ளது.

பல தட­வைகள் இவ்­வா­றான செயற்­பா­டுகள் வைத்­தியர், தாதி­யர்கள் கவனக் குறைவு கார­ண­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இம்­முறை அது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே இது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அமைச்­சுக்­க­ளிடம் நாம் முறைப்­பாடு செய்வோம்” என அவர் மேலும் தெரி­வித்தார்.-Vidivelli

  • ஏ.எச்.ஏ. ஹுஸைன்

Leave A Reply

Your email address will not be published.