ஹஜ் குறித்து கலந்துரையாட சவூதிக்கு இலங்கையிலிருந்து குழு செல்லாது

கலாசார அமைச்சு தீர்மானம்

0 1,434

2020 ஆம் ஆண்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் மற்றும் கோட்டா தொடர்­பான சவூதி ஹஜ் அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லுக்கு இலங்­கை­யி­லி­ருந்து தூதுக் குழு­வொன்­றினை சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்பி வைப்­ப­தில்லை என கலா­சார அமைச்சு தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது.

ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான சவூதி ஹஜ் அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொள்­ளு­மாறு சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் அஸ்­மி­தாசிம் மற்றும் கொன்­சி­யுலர் நாயகம் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் ஆகியோர் கலா­சார அமைச்­சினால் வேண்­டப்­பட்­டுள்­ளனர். அதற்­கான கடி­தங்கள் அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

2020 ஹஜ் தொடர்­பாக இலங்­கைக்கு கோட்டா வழங்கல் மற்றும் ஏற்­பா­டுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு சமு­க­ம­ளிக்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்சு ஏற்­க­னவே இலங்­கைக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்­தது. அதற்­காக எதிர்­வரும் 19 ஆம் திகதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­க­மை­வாக இலங்­கை­யி­லி­ருந்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், ஹஜ் முகவர் ஒருவர் மற்றும் கலா­சார அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் என மூவர் பய­ணிக்க இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யி­லேயே இலங்­கை­யி­லி­ருந்து தூதுக் குழு­வொன்று சவூதி அரே­பி­யா­வுக்கு செல்லத் தேவை­யில்லை எனவும் அந்த பேச்­சு­வார்த்­தையில் தூது­வரும், கொன்­சி­யுலர் நாய­கமும் கலந்து கொண்டால் போது­மா­னது என கலா­சார அமைச்சின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

இது­வரை காலம் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் இலங்கை தூதுக் குழு கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஒவ்வொரு வரு­டமும் இலங்­கை­யி­லி­ருந்து 3 – 5 க்கும் இடைப்­பட்­ட­வர்­களைக் கொண்ட குழு­வொன்று பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்டு வந்­துள்­ளனர். இவர்­க­ளது விமான பய­ணச்­சீட்டு மாத்­தி­ரமே அர­சாங்­கத்­தினால் பெற்றுக் கொடுக்­கப்­படும். சவூ­தியில் குழு தங்­கி­யி­ருக்கும் காலத்தில் தங்­கு­மிட வசதி, உணவு, போக்­கு­வ­ரத்து என­்ப­வற்றை சவூதி ஹஜ் அமைச்சே வழங்கும்.

சவூ­தியில் ஹஜ் அமைச்­ச­ரு­டனும் ஏனைய அதி­கா­ரி­க­ளு­டனும் ஹஜ் கோட்டா, சவூ­தியில் ஹஜ் கட­மையின் போது போக்­கு­வ­ரத்து வச­திகள், குர்பான் ஏற்­பா­டுகள், இலங்கை ஹாஜி­க­ளுக்­கான தங்­கு­மிட வச­திகள், முஅல்லிம் ஏற்­பா­டுகள் என்­பன தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டி­யுள்­ளது.

இந்­நி­லையில் இந்த விட­யங்­களில் சவூ­தி­யி­லுள்ள இலங்கை தூது­வ­ராலும் கொன்சியுலர் நாயகத்தினாலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியுமா என்று ஹஜ் முகவர்களால் வினவப்படுகிறது.

இதேவேளை அரச ஹஜ் குழு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் இதுவரை ஹஜ் குழுவொன்று நியமிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.