ஹஜ் யாத்திரை 2020

2900 பேர் பயணத்தை உறுதி செய்துள்ளனர்

0 1,295

2020 ஆம் ஆண்டில் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு இது­வரை சுமார் 2900 விண்­ணப்­ப­தா­ரி­களே தங்­க­ளது பய­ணத்தை 25 ஆயிரம் ரூபா மீள கைய­ளிக்கப் படக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ணத்தைச் செலுத்தி உறுதி செய்­தி­ருக்­கி­றார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

திணைக்­களம் சுமார் 4600 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு கடி­தங்­களை அனுப்­பி­வைத்­தி­ருந்­தது என்­றாலும் 2900 பேரே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­துள்­ளனர். எனவே 24 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட பதி­வி­லக்­கங்­களைக் கொண்ட சுமார் 1500 பேருக்கு திணைக்­களம் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு அடுத்­த­வாரம் கடி­தங்­களை அனுப்பி வைக்­க­வுள்­ளது.

திணைக்­க­ளத்தின் மூலம் கடி­தங்கள் கிடைக்­கப்­பெறும் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் இம்­மாத இறு­திக்குள் தங்­க­ளது பய­ணத்தை மீள கைய­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய பதிவுக் கட்­டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்­யு­மாறு வேண்­டப்­ப­டு­கின்­றனர் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார். 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள், கிடைக்­கப்­பெறும் ஹஜ் கோட்­டா­வுக்கு அமை­வாக பயணத்தை உறுதி செய்துள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளின் பதிவிலக்க வரிசைப்படி தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.