பர்தா அணிந்து பரீட்சை எழுத: முஸ்லிம் மாணவிகளுக்கு தொடர்ந்தும் தடங்கல்கள்

கொழும்பிலும் 100 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

0 2,264

பர்தா அணிந்து க.பொ.த சாதா­ரண தர பரீட்சை எழு­து­வ­தற்குச் செல்லும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பரீட்சை மண்­ட­பத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என வெளி­வரும் செய்­திகள் உண்­மைக்குப் புறம்­பா­னவை என கல்வி அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும அறிக்கை வெளி­யிட்­டுள்ள நிலையில் தொடர்ந்தும் பரீட்சை நிலை­யங்கள் சில­வற்றில் பர்­தா­வுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான சம்­பவம் நேற்றும், நேற்று முன்­தி­னமும் கொழும்­பு–­பொ­ரளை சி.டப்­ளியூ..கன்­னங்­கரா வித்­தி­யா­லய பரீட்சை மண்­ட­பத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இப்­ப­ரீட்சை மண்­ட­பத்தில் பரீட்சை எழு­து­வ­தற்குச் சென்ற 100 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் பரீட்சை ஆரம்ப தின­மான கடந்த 2 ஆம் திகதி பர்­தா­வுடன் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் நேற்றும், நேற்று முன்­தி­னமும் அவர்கள் பர்­தா­வுடன் பரீட்சை மண்­ட­பத்­தினுள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பர்­தாவைக் களைந்து V வடிவில் முந்­தா­னை­யிட்டு பரீட்சை மண்­ட­பத்­துக்குள் வரு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளார்கள்.

இதனால் நேற்றும், நேற்று முன்­தி­னமும் முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் பர்­தாவைக் களைந்த பின்பே பரீட்சை மண்­ட­பத்­தினுள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

பரீட்சை மண்­டப நுழை­வா­யிலில் இரு பொலிஸ் அதி­ர­டிப்­படை வீரர்கள் கட­மையில் இருந்­துள்­ளனர். அவர்­களே இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்­ளனர். இதற்­கான கார­ணத்தை பரீட்­சார்த்­தி­களின் பெற்றோர் சம்­பந்­தப்­பட்ட அதி­ர­டிப்­படை வீரர்­க­ளிடம் வின­வி­ய­போது கல்வி அமைச்சின் சுற்று நிரு­பத்­துக்கு அமை­யவே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.

பரீட்­சார்த்­திகள் தங்­க­ளது தேசிய அடை­யாள அட்­டையில் காட்­சி­ப்ப­டுத்­தப்­பட்­டுள்ள போட்­டோவின் பிர­கா­ரமே அனு­ம­திக்­கப்­ப­டுவர். தேசிய அடை­யாள அட்டை புகைப்­படம் காது­கள் தெரியும்படியே உள்­ளது. எனவே அதன்­ப­டியே அனு­ம­திக்க முடியும் எனவும், கல்வி அமைச்சின் சுற்று நிருபம் இவ்­வாறே தெரி­விக்­கி­ற­தெ­னவும் கூறி­யுள்ளனர்.

இதனால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கினர். அவர்கள் பர்­தாவைக் களைந்து முந்­தா­னையை V வடிவில் அணிந்தே பரீட்சை மண்­ட­பத்­தினுள் பிர­வே­சிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. கடந்த 2 ஆம் திகதி கெக்­கி­ராவ கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட மடா­டு­கமை ஜாயா வித்­தி­யா­ல­யத்தில் பரீட்சை எழு­து­வ­தற்குச் சென்ற சுமார் 80 பரீட்­சார்த்­திகள் பர்­தாவைக் களைந்த பின்பே பரீட்சை நிலை­யத்­துக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இச்­சம்­ப­வத்தை இலங்கை ஆசி­ரியர் சங்கம் வன்­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தது.

‘இச்­சம்­பவம் பிழை­யான நடை­மு­றை­யாகும். அவர்கள் உள ரீதியில் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இது தொடர்­பாக விசா­ரணை நடத்­து­மாறு மாகாண கல்விப் பணிப்­பா­ளரை வேண்­டி­யுள்ளேன்’ என இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் தலைவர் பிரி­யந்த பர்­ணாந்து தெரி­வித்­தி­ருந்தார். இச்­சம்­ப­வத்­தையே கல்வி அமைச்சர் மறுத்து அறிக்கை வெளி­யிட்­டி­ருந்தார். ‘இது உண்­மைக்குப் புறம்­பான தகவல் என்றும் அர­சியல் லாபம் கருதி வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்தி எனவும் அமைச்சர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பரீட்­சைக்குத் தோற்றும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் பரீட்­சார்த்­திகள் எவ்­வித இடை­யூ­று­மின்றி பரீட்சை எழு­து­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அறிக்­கையில் தெரி­வித்­தி­ருந்தார். சம்­ப­வங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் புதிய அரசின் முஸ்லிம் விவகாரங்களுக்கு ஆலோசகர் நகீப் மெளலானாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

‘விடிவெள்ளி’ நகீப் மெளலானாவைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் வினவியபோது சம்பவங்கள் தொடர்பில் கல்வியமைச்சரைத் தொடர்பு கொண்டு தீர்வு பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.