சுற்றுச் சூழலை பாதுகாக்க முன்னுரிமை வழங்குங்கள்

லண்டனில் வசிக்கும் 6 வயது அப்துல்லாஹ் பிரதமர் மஹிந்தவுக்கு கடிதம்

0 1,475

பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு வாழ்த்துத் தெரி­வித்தும் இலங்­கையின் சுற்றுச் சூழலை பாது­காப்­ப­தற்குமுன்­னு­ரிமை வழங்­கு­மாறும் கோரி பிரித்­தா­னி­யாவில் வசிக்கும் இலங்கைச் சிறு­வ­னான அப்­துல்லாஹ் அபூபைத் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார்.

குறித்த கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்­ற­தாகத் தெரி­வித்து, பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தனது டுவிட்டர் பக்­கத்தில் நேற்று பதி­வொன்றை இட்­டுள்ளார்.
”6 வய­தான அப்­துல்லாஹ் அபூபைத் எனக்கு அனுப்­பிய கடிதம் இன்று காலை எனக்கு கிடைத்­தது. அதற்­காக நன்றி கூறு­கிறேன். அந்த கடிதம் என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­யது. மேலும் மூத்த தலை­மு­றை­யி­னராய் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு செய்ய வேண்­டிய கட­மை­க­ளையும் நினை­வூட்­டி­யது. ஒரு நாள் நான் அவரை சந்­திப்பேன். வாழ்த்­துக்கள்” என பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தனது டுவிட்டர் பக்­கத்தில் தெரி­வித்­துள்ளார்.

ஆறு வய­தான அப்­துல்லாஹ் அபூபைத் கடந்த 26 ஆம் திகதி பிர­த­ம­ருக்கு ஆங்­கி­லத்தில் அனுப்­பி­யுள்ள கடி­தத்தின் மொழி­பெ­யர்ப்பு வரு­மாறு:
”நான் அப்­துல்லாஹ். ஆறு வயது சிறுவன். நான் லண்­டனில் வசிக்­கின்ற லண்டன் வாழ் இலங்­கை­ய­ராவேன். ஆச்­ச­ரி­ய­மிக்க இலங்­கையை நான் 100% நேசிக்­கிறேன்.

எனது தாய் உங்­க­ளது வெற்­றியைப் பற்றிக் கூறினார். உங்கள் வெற்­றிக்கு நான் வாழ்த்துக் கூறு­கிறேன்.

நான் உங்­க­ளிடம் மிக முக்­கிய விடயம் ஒன்­றைப்­பற்றி பேச வேண்டும். தயவு செய்து சுற்றுச் சூழ­லுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வீர்­களா? எங்கள் எதிர்­காலம் உங்கள் கைக­ளி­லேயே இருக்­கின்­றது.

இலங்­கையின் கடற்­க­ரை­க­ளையும் கட­லையும் பாது­காக்க ஒரு திட்­டத்தை வகுக்க முடி­யுமா? இதன் மூலம் ஆமைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­துடன் அவை ஒவ்­வொரு வரு­டமும் இலங்­கையின் கடற்­க­ரை­க­ளுக்கு வருகை தரும். என்னைப் போல. உங்­க­ளுக்கு எனது வாழ்த்­துக்கள். அன்­புடன் அப்­துல்லாஹ் அபூபைத் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் சிறுவனின் கடிதத் திற்கு பலரும் டுவிட்டரில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.-Vidivelli

  • ஷிப்னா சிராஜ்

Leave A Reply

Your email address will not be published.