ரிஷாதுக்கு எதிரான பிரேரணை ரத்தானது

0 1,654

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற அமர்வு முடி­வுக்குக் கொண்டு வந்­த­தை­ய­டுத்து இரத்­தா­கி­யுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தலின் பின்பு அச்­சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் சிலரை விடு­விப்­ப­தற்கு இரா­ணுவ தள­ப­திக்கு அழுத்தம் பிர­யோ­கித்­தமை, சினமன் கிரேன்ட் ஹோட்­டலில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடத்­திய குண்­டு­தாரி இன்சாப் அஹமட் இப்­ராஹீம் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான தொழிற்­சா­லைக்கு கைத்­தொழில் அமைச்சின் மூலம் வெற்றுத் தோட்­டாக்கள் விநி­யோ­கித்­தமை உட்­பட பல குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரால் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­தோடு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிர­லிலும் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது.

பாரா­ளு­மன்ற அமர்வு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலையில் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலும் ரத்­தா­கி­யுள்­ளது. அதனால் அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் அகற்­றப்­பட்­டுள்­ள­தென பாரா­ளு­மன்ற அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதே­வேளை பாரா­ளு­மன்றம் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டதும் தேவை­யேற்­படின் அந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மீண்டும் முன்­வைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

அத்­தோடு பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கடந்த 51 நாட்கள் அர­சாங்­கத்தில் கட­மை­யாற்­றிய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்தல் உட்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பான 6 பிரேரணைகளும் பாராளுமன்ற அமர்வு முடிவுக்கு வந்ததையடுத்து இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.