நாங்கள் வாழ்வது சவூதியில் அல்ல; இலங்கையில்

பிரிகேடியர் அசார் இஸ்ஸடீன்

0 1,396

“சிங்­கள – முஸ்லிம் நல்­லு­றவை சீர்­கு­லைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்­காக முறை­யான விசா­ணைகள் நடத்­தப்­பட வேண்­டி­யி­ருப்­ப­தோடு இன்­றைய சூழ்­நி­லையில் நடை­பெ­று­வது போன்ற அநீ­தி­யா­னதும் இன­வாத அடிப்­ப­டை­யி­லு­மான குறு­கிய நோக்கம் கொண்ட சம்­ப­வங்கள் இனிமேல் நடை­பெ­றாமல் தடுப்­ப­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். முஸ்லிம் சமூ­கத்­திற்குள் அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மானால் அது முரண்­பா­டான சூழ்­நி­லை­க­ளுக்கு முற்றுப் புள்­ளி­யாக அமை­யும்”­என இலங்கை இரா­ணுவ அதி­கா­ரி­யான பிரி­கே­டியர் அசார் இஸ்­ஸடீன் தெரி­விக்­கின்றார்.

“சிங்­கள மக்கள் எங்­கா­வது சுற்றுப் பிர­யா­ணங்கள் போகும் போது அவர்­க­ளது விலை மதிப்­பற்ற பெறு­ம­தி­யான பொருட்­களை திரும்பி வரும் வரையில் பாது­காப்­பிற்­காக முஸ்லிம் மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்து விட்டுச் செல்லும் மரபு ரீதி­யான வழக்கம் முன்­னைய சிங்­களக் கிரா­மங்­களில் இருந்து வந்­தது. சிங்­கள மக்கள் அவர்­க­ளது பிர­யா­ணங்­களை முடித்துக் கொண்டு கிரா­மத்­திற்கு திரும்பி வரும் வரையில் அவர்­க­ளது விலை மதிப்­பற்ற பொருட்­களை பத்­தி­ர­மாக பாது­காக்கும் பொறுப்பு “கமே நானா” (முஸ்லிம் கிரா­மத்தின் பிர­தானி) விடம் இருந்து வந்­தது. அப்­ப­டிப்­பட்ட ஒரு யுகம் இந்த நாட்டில் இருந்­தது. அந்த நம்­பிக்கை இன்று முஸ்லிம் சமூகம் குறித்து இல்­லாமல் போய்­விட்­டது”.
இன­வா­தத்தின் மூலம் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்தி அவர்­களை பாது­காப்­ப­தற்­காக திரு­கோ­ண­ம­லையின் வடக்கு கடற்­கரை பிர­தே­சத்தில் உள்ள மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் பக்­க­மாக இருந்து சிங்­கள குரல் ஒலிக்­கின்­றது.

இலங்கை இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் உயர் அதி­கா­ரி­யான அசார் இஸ்­ஸதீன் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் நீண்ட கால­மாக மிகவும் பலம் வாய்ந்­த­தாக இருந்து வந்த ஒற்­று­மை­யா­னது சீர்­கு­லை­வ­தற்­கான கார­ணங்­களை கண்­ட­றியும் முயற்­சியில் மிகவும் கடு­மை­யாக ஈடு­பட்­டுள்ளார்.

இனத்தின் பெயரால் கடந்த காலப்­ப­கு­தியில் நடை­பெற்­றது போன்ற இன­வா­தத்தின் அடிப்­ப­டை­யி­லான மிக மோச­மான, கசப்­பான செயற்­பா­டுகள் இனிமேல் நடை­பெ­றாமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வேண்டும்.

அதனை நோக்காகக் கொண்டு இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் சிரேஷ்ட முஸ்லிம் இரா­ணுவ அதி­கா­ரிகள் குழு­வொன்று முஸ்லிம் கிரா­மங்­க­ளுக்கு விஜ­யங்­களை மேற்­கொண்டு நிலை­மை­களை புரிய வைப்­பதில் ஈடு­பட்­டனர்.
அதே போன்று தற்­போ­தைய இரா­ணுவ கட்­டளைத் தள­பதி மஹேஷ் பெரே­ராவின் தலை­மையில் இத்­திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தோடு அவ­ரது பிர­தான திட்­ட­மாக முன்­வைக்கப் பட்­டி­ருப்­பது சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் நிலவும் சந்­தே­கங்­களை போக்­கு­வ­தற்கும் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாகும்.

“ஏற்­க­னவே நாங்கள் திகன மற்றும் பேரு­வளை சம்­ப­வங்­களின் போதும் இதே போன்ற நிலை­மை­க­ளுக்கு முகம் கொடுத்தோம். மக்கள் ஒற்­று­மை­யா­கவும் ஒன்­றா­கவும் வாழ்ந்து வரு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் இத்­த­கைய சம்­ப­வங்கள் நடை­பெறும் போது குறிப்­பாக, இனப்­பி­ரச்­சினை அல்­லது முரண்­பா­டு­களின் ஒரு பகு­தி­யாக முஸ்லிம் சமூகம் உள்­வாங்­கப்­ப­டு­வது இலங்­கையின் போக்கில் பொது­வா­ன­தாக மாறி இருக்­கின்­றது. இது இலங்­கையின் போக்கில் ஒரு பிர­தான பல­வீ­ன­மாகும். இன ரீதி­யான நட்­பு­றவு என்ற செய்தி எங்­க­ளது சமூ­கத்தில் உள்ள இளம் தளை­மு­றை­யி­னர்கள் மத்­தியில் எடுத்துச் சொல்­லப்­பட வேண்­டிய விட­ய­மாக இருந்து வரு­கின்­றது” என்று பிரி­கே­டியர் இஸ்­ஸதீன் குறிப்­பி­டு­கின்றார்.

வன்­மு­றை­யா­னது இஸ்­லாத்தின் ஓர் அங்கம் அல்ல என்­ப­தோடு முஸ்லிம் சமூ­கத்­தினர் சிங்­க­ள­வர்­க­ளு­டனும் தமி­ழர்­க­ளு­டனும் ஐக்­கியம், நல்­லு­றவை வளர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் பற்றி மிகவும் அவ­தா­ன­மாக சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் இந்த நட­வ­டிக்­கை­களை சீர்­கு­லைக்க எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் பற்றியும் அதற்கான காரணிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகின்றது.

“நாங்கள் வாழ்ந்து வருவது சவூதி அரேபியாவில் அல்ல. நாம் வாழ்வது இலங்கையிலாகும். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அரபி மொழியையும் ஏனைய மாற்று மொழிகளையும் கற்பிப்பதற்கு முன்னர் சிங்கள மொழியை கற்பித்தால் பிரச்சினை இந்தளவிற்கு மோசமானதாக மாறாது. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் பிரதான கருவியாக அமைவது மொழியாகும்” என்றும் பிரிகேடியர் அசாத் மேலும் கூறினார்.-Vidivelli

  • மங்களனாத் லியனாராச்சி
    த.கட்டுமரன்

Leave A Reply

Your email address will not be published.