ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் : தவறுகளை மறைப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரிப்பு?

ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டு

0 1,460

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பாது­காப்பு உயர் அதி­கா­ரி­க­ளுக்கு ஏற்­க­னவே கிடைக்­கப்­பெற்ற புல­னாய்வு தக­வல்கள் அவர்­களால் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. தாக்­கு­தலைத் தவிர்ப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­ததன் கார­ண­மாக குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இது தொடர்­பான தக­வல்­களை மறைப்­ப­தற்­காக ஒரு சில அதி­கா­ரிகள் போலி ஆவ­ணங்­களைத் தயா­ரித்­தார்­களோ என சந்­தேகம் நில­வு­வ­தாக இத்­தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் தலைவர் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி ஜனக் டி சில்வா, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நேற்று முன்­தினம் மாலை உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இவ் ஆணைக்­குழு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­ட­தாகும்.

இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்­பான விப­ரங்­களை ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு வழங்­கி­யுள்­ளது. ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஜனா­தி­ப­தி­யிடம் அதன் செயற்­பா­டுகள் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி,
தாக்­கு­த­லுக்­கான கார­ணத்தை சரி­யாக இனங்­கண்டு, அதற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் அபி­லா­ஷையும் இது­வே­யாகும்.

நான் பாது­காப்பு செய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­ய­போது தேசிய பாது­காப்பு சபை தினமும் ஒன்று கூடி­யது. புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரி­க­ளுடன் நாட்டின் பாது­காப்பு நிலைமை தொடர்பில் தொடர்ச்­சி­யாக கலந்­து­ரை­யா­டினேன்.
பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் தக­வல்கள் கிடைத்த மறு­க­ணமே தாம­த­மின்றி தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டேன். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நாட்­டுக்கு வந்து அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை பிர­சாரம் செய்த 160 விரி­வு­ரை­யா­ளர்கள் இவ்­வாறே நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய பாது­காப்புத் தொடர்பில் பார­தூ­ர­மான வகையில் சிந்­தித்து செயற்­ப­டா­மை­யினால் புல­னாய்­வுத்­துறை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இத­னா­லேயே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் பிர­சாரம் செய்­யப்­ப­டு­வதை தடை செய்ய முடி­யா­துள்­ளது.

தாக்­குதல் தொடர்­பான சகல தக­வல்­க­ளையும் கண்­ட­றி­வ­துடன், இத்­த­கைய தாக்­கு­தல்கள் மீண்­டு­மொ­ரு­முறை இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­களை பரிந்­துரை செய்ய வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

அத்­தோடு பாது­காப்பு பொறி­முறை வீழ்ச்­சி­ய­டை­வ­தற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். இதற்­காக ஆணைக்­கு­ழு­விற்கு தேவை­யான அனைத்து வச­தி­களும் வழங்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்வா தலை­மையில் மேன்­மு­றை­யீட்டு நீதி­பதி நிஸ்­ஸங்க பந்­துல கரு­ணா­ரத்ன, ஓய்வு பெற்ற மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக் ஷ, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.அதிகாரி ஆகியோர் இவ் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.