வக்பு சபையும் பதவி விலகல்

0 1,472

புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மையில் புதிய அர­சாங்­க­மொன்று பத­விக்கு வந்­துள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மினால் நிய­மனம் பெற்று 2015 ஆம் ஆண்டு முதல் இயங்­கி­வந்த வக்பு சபை பதவி வில­கி­யுள்­ளது.

இது­வரை காலம் வக்பு சபையின் தலை­வ­ராகப்பதவி வகித்து வந்த சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்­கிடம் கைய­ளித்­துள்­ள­தா­கவும், ஏனைய உறுப்­பினர் களையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு கோரி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

வக்பு சபைக்­கான நிய­மன விதி­க­ளின்­படி அதன் நிய­ம­னங்கள் பொறுப்­பான அமைச்­ச­ரி­னா­லேயே வழங்­கப்­ப­ட­வேண்டும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் நாங்கள் பதவி வில­கா­விட்­டாலும் பதவி இழக்­கப்­பட்­டுள்ளோம். முஸ்லிம் சமய விவ­காரம் தற்­போது கலா­சார அமைச்சின் கீழேயே உள்­ளது. அதற்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனவே வக்பு சபைக்கு புதிய நிய­ம­னங்­களை பிர­த­மரே வழங்க வேண்டும்.

எனது தலை­மை­யி­லான வக்பு சபை 2015 ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்டு 2018 இல் பத­விக்­காலம் நிறை­வுற்­றதும் மீண்டும் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. வக்பு சபையில் தலை­வ­ருடன் மொத்தம் 7 பேர் அங்கம் வகிக்­கின்­றனர்.

வக்பு சபை தனது கட­மை­களைப் பொறுப்­புடன் முன்­னெ­டுத்­துள்­ளது. பள்­ளி­வாசல் பதி­வுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. பள்­ளி­வாசல் நிர்­வாகம் தொடர்­பான சில வழக்­கு­களே விசா­ர­ணையின் கீழ் இருக்­கின்­றன.

எமது பத­விக்­கா­லத்தில் நாம் பள்­ளி­வாசல் பதி­வு­க­ளுக்­கான வழி­மு­றைகள், (Guide Lines), பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் நிய­ம­னங்­க­ளுக்­கான வழி­மு­றைகள், முஸ்லிம் கலா­சார நிதியம் (M.C.F) எவ்­வாறு பயன்­ப­டுத்­த­வேண்டும் என்­பன தொடர்­பான வழி­மு­றை­களைத் தயா­ரித்து முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு வழங்­கி­யுள்ளோம். அவ்­வ­ழி­மு­றைகள் தற்­போது அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும் மத்­ரஸாக் கல்வித் திட்டம், நிர்­வாகம் தொடர்­பான முன்­னேற்­ற­க­ர­மான திட்­டங்­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். பள்­ளி­வா­சல்­களில் இயக்க ரீதி­யான முரண்­பா­டு­க­ளுக்குத் தடை விதித்­துள்ளோம் என்றார்.

மேலும், அவர் எமது பத­விக்­கா­லத்தில் வக்பு சபைக்கும் பொறுப்­பாக இருந்த அமைச்சர் எவ்­வித அர­சியல் தலை­யீ­டு­க­ளையும் மேற்­கொள்ள வில்லை.

அதனால் எம்மால் சுதந்­தி­ர­மாக இயங்க முடிந்­தது. எமது கட­மை­களை சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுக்க ஒத்­து­ழைத்த அமைச்சர் ஹலீம், முஸ்லிம் சமய பண்­பாட்ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் மற்றும் அதி­கா­ரிகள், வக்பு சபையின் உறுப்­பி­னர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

வக்பு சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக் கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டன. அந்நடவடிக்கைகளை புதிதாக பதவிக்கு வரும் வக்பு சபை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.-Vidivelli 

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.