பௌஸியை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் கடிதத்தில் ஒப்பமிட்டார் அமரவீர

ஒரு மாதத்தில் பதவி இரத்தாகும் என்றும் தெரிவிப்பு

0 1,366

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெள­சியை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கு­வ­தற்­கான கடி­தத்தில் நான் கையொப்­ப­மிட்டு விட்டேன். இன்னும் ஒரு மாத காலத்தில்அவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் இரத்­தாகும். அவர் விரும்­பினால் நீதி­மன்­றினை நாடலாம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

சபு­கஸ்­கந்தை எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தைப் பார்­வை­யிடச் சென்ற அமைச்சர் மஹிந்த அம­ர­வீர ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு முர­ணாக கட்­சியின் கட்­டுப்­பாட்­டினை மீறி­ய­த­னாலே இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. பெளசி மாத்­தி­ர­மல்ல கட்­சியின் கொள்­கை­க­ளுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் கட்­சியின் கட்­டுப்­பாட்­டினை மீறி செயற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை மற்றும் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

இத்­தீர்­மானம் எதிர்­வரும் காலங்களில் நிறைவேற்றப்படும். ஒழுக்காற்று விசாரணை களின் பின்பு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.