முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தம் அவசியமே

மட்டு. பல்கலை, டாக்டர் சாபி விவகாரத்திற்கு நடவடிக்கை தேவை என்கிறார் ரதன தேரர்

0 1,742

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன், கண்­டிய விவாக ரத்துச் சட்டம் மற்றும் பொது விவாக சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்ள வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்­துள்ளார்.இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள சதனம் செவ­னவில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,
ஜனா­தி­பதி தேர்­தலின் போது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்­களின் 5சத­வீத வாக்­கு­களே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. இருப்­பினும் சிங்­கள மக்­களின் வாக்­குகள் அதி­க­ளவில் கோத்தா­பய ராஜ­ப­க் ஷ­விற்கு கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது. விசே­ட­மான முறையில் ஏரா­ள­மான தேரர்­களும் இந்த தேர்­த­லின்­போது தமது பங்­க­ளிப்பை நாட்­டிற்­காக வழங்­கி­யி­ருந்­தனர். அது மாத்­தி­ர­மல்­லாது வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் ஏரா­ள­மான சிங்­கள மக்கள் நாட்­டிற்கு வருகை தந்­த­துடன், இந்த தேர்­தலின் போது தமது பங்­க­ளிப்­பினை முழு­மை­யாக வழங்­கி­யி­ருந்­தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழுந்­தன. அது தொடர்பில் ஆராய்ந்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்தோம். இந்­நி­லையில், குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­களை நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்த விடயம் தொடர்­பிலும் சிந்­தித்தே சிங்­கள பௌத்த மக்கள் இந்த முடி­வுக்கு வந்­துள்­ளனர்.

தமிழ் மக்கள் சிலரும் இதன்­போது கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாக்­க­ளித்து தமது பங்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவர்­க­ளுக்கும் எமது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் வாக்­கு­களால் மாத்­திரம் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­ய­மு­டி­யாது என கூறினர். ஆயினும் அந்த கருத்து பொய்­யா­னது என்­ப­தனை நாம் இந்த தேர்தல் வெற்­றியின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

கருத்­தடை விவ­காரம் தொடர்பில் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்கின் விசா­ர­ணை­களை திசார, நிஷாந்த சில்வா மற்றும் ஷானி அபே­சே­கர ஆகியோர் முறை­யாக மேற்­கொள்­ள­வில்லை. ஆகவே இந்த விசா­ர­ணைகள் கட்சி பேத­மின்றி உரிய விதத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இது­தொ­டர்பில் நாம் பொலிஸ் ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தோம். ஆயினும் அந்த வழக்கு விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம்­பெ­ற­வில்லை என்றே கூற­மு­டியும். இந்த அர­சாங்கம் அது­தொ­டர்பில் தகுந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மென நம்­பு­கின்றோம்.

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பான விட­யங்­க­ளிலும் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு முறை­யிட்­டி­ருந்தோம். ஆயினும், கடந்த அர­சாங்­கத்தில் முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. ஆகவே, இது தொடர்பில் விசேட ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­மென நம்­பு­கின்றோம். அத்­துடன், தேசிய ரீதியில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்

1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக பொது கட்­ட­ளைச்­சட்டம், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் மற்றும் 1952 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க கண்­டிய விவாக நீக்­க­சட்டம் ஆகி­ய­வற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன், நாட்­டிற்குப் பொது­வா­ன­தொரு சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் .

தேர்தல் முறைமை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அடிபணியாத உறுதியான தன்மை என்பவை தொடர்பில் கோத்தாபய ராஜபக் ஷ கவனம் செலுத்தியிருந்ததுடன், அனைத்து துறைசார் அபிவிருத்தி தொடர்பிலும் சிறந்த கொள்கைகளை முன்வைத்திருந்தார். அந்த வகையில் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படவேண்டியது அவசியமானதாகும். ஆகவேதான் நாம் அவருக்கு எமது ஆதரவை வழங்கியிருந்தோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.