முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூம் யாமீனுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்தே ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குற்றவியல் நீதிமன்றம் இத் தண்டனையை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்துமாறும் அப்துல் கையூம் யாமீனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர் அரச நிதியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
யாமீன் 2013 முதல் 2018 வரை மாலைதீவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல், ஊடக அடக்குமுறை மற்றும் அரசியல் எதிரிகளை தண்டனைக்குட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொண்டிருந்தார்.
கடந்த வரும் இடம்பெற்ற தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சாலிஹிடம் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.-vidivelli