மக்­களின் அபி­லா­சை­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது

முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

0 740

அர­சியல் அநா­தை­களின் தேவை­க­ளுக்கு பெரும்­பா­லான மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை ஒரு­போதும் விட்டுக் கொடுக்க முடி­யாது. மக்கள் விரும்­பு­கின்ற மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும் என்றால் ஐக்­கிய தேசிய கட்­சியில் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். அவ்­வா­றல்­லாது வெற்றி இலக்கை அடைய முடி­யாது என்று முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டிகள் மாற வேண்­டு­மாயின் நாங்­க­ளா­கவே ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும். இன்­றைய நிலைமை ஒரு அனு­பவம் என்றே குறிப்­பிட வேண்டும். அர­சியல் ரீதியில் சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் தலை­மைத்­து­வங்கள் ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அலரி மாளி­கையின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஐ.தே.மு.வின் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கான கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சியல் ரீதியில் இன்று பாதை தடம் புரண்­டுள்­ளது. அர­சியல் ரீதியில் அநா­தை­க­ளாக வந்­த­வர்கள் இன்று தமது அர­சியல் எதிர்­கா­லத்தை கருத்­திற்­கொண்டு ஜன­நா­ய­கத்தை குழி தோண்டிப் புதைத்­து­விட்­டனர்.

அர­சியல் நெருக்­க­டி­களின் போது ஒரு தரப்­பினர் தாம் கடந்து வந்த அர­சியல் பாதை­யினை மறந்து விட்­டனர். எதிர்­கால அர­சியல் இருப்­பினை தக்­க­வைத்­துக்­கொள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தின் பின்னால் செல்­கின்­றனர். பல கார­ணங்­களை குறிப்­பிட்டு தேர்­தலை பிற்­போட்­ட­வர்கள் இன்று எம்மை விமர்­சிக்­கின்­றனர். தேர்­தலை உரிய காலத்தில் நடத்­தா­மையே இன்­றைய அர­சியல் நெருக்­க­டிக்கு காரணம் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

சிறு­பான்மை மக்கள் மற்றும் சிறு­பான்மை அர­சியல் தலை­மைத்­து­வங்கள் இன்று விழிப்­புடன் செயற்­பட வேண்டும் . ஜன­நா­யக ரீதியில் ஒரு அர­சாங்கம் அமைந்தால் மாத்­தி­ரமே சிறு­பான்மை மக்கள் தொடர்ந்து எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடியும். ஐக்­கிய தேசிய கட்சி நாட்டில் பல­மிக்க கட்­சி­யாக காணப்­ப­டு­கின்­றது. கட்­சியில் சில மாற்­ற­ங­்களை ஏற்­ப­டுத்தி சவால்­க­ளை எதிர்­கொள்வோம் என்று கட்­சியின் தலை­மைத்­து­வத்­திற்கு குறிப்­பிட்­டுள்ளோம்.

ஐக்­கிய தேசிய கட்­சியில் ஒரு பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியே சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஒரு தரப்பினரின் அரசியல் தேவைகளுக்காக பெரும்பான்மையான மக்கள் வழங்கிய மக்களாணையினை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.