பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு துருக்கி கட்டார் இராணுவத் தளம் சேவையாற்றுகின்றது

0 1,419

கட்­டாரில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் துருக்­கியின் புதிய இரா­ணுவத் தளம் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக துருக்­கிய ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­துகான் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார்.

ஐந்­தா­வது துருக்கி – கட்டார் உயர்­மட்ட தந்­தி­ரோ­பாயக் குழுக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்­காக கடந்த திங்­கட்­கி­ழமை டோஹா­வுக்கு வந்து சேர்ந்தார்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் சவூதி அரே­பியா தலை­மையில் கட்டார் மீதான தடை விதிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து சுமார் 5,000 படை­யினர் நிலை­கொண்­டுள்ள துருக்­கிய இரா­ணுவத் தளத்தில் இரா­ணு­வத்­தி­ன­ருடன் அவர் உரை­யா­டினார். 100 துருக்­கிய தாங்­கி­களை கட்டார் கொள்­வ­னவு செய்­ய­வுள்ள நிலை­யி­லேயே இவ்­வி­ஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

துருக்கி – கட்டார் இணைந்த படை­யணி ஸ்திரத்­தன்மை மற்றும் சமா­தா­னத்­திற்­காக கட்­டா­ருக்கு மாத்­தி­ர­மல்­லாது ஒட்­டு­மொத்த வளை­குடாப் பிராந்­தி­யத்­திற்கும் சேவை­யாற்­று­கின்­ற­தென புதி­தாகக் கட்டி முடிக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவத் தளத்தில் இரா­ணு­வத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர் தெரி­வித்தார்.

ஏழாம் நூற்­றாண்டில் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்­க­ளது படை­க­ளுக்குத் தலை­மை­தாங்­கிய இரா­ணுவ ஜென­ரல்­களுள் ஒரு­வ­ரான காலித் இப்னு வலீதின் பெயர் இப்­ப­டை­ய­ணியின் நிலை­யத்­திற்கு சூட்­டப்­பட்­டுள்­ளது. காலித் இப்னு வலீத் யுத்­தத்­தின்­போது மிக வீரத்­துடன் போரிட்­ட­வ­ராவார். அத­னால்தான் அவ­ருக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘அல்­லாஹ்வின் உரு­வப்­பட்ட வாள்’ என்ற பட்டப் பெயரை வழங்­கி­னார்கள்.

இந்த இரா­ணுவத் தளம் சகோ­த­ரத்­துவம், நட்­பு­றவு, ஆத­ரவு மற்றும் நாண­யத்தின் அடை­யா­ள­மாகும் என அர்­துகான் வர்­ணித்தார்.

அச்­சு­றுத்தல் மற்றும் ஆபத்து ஏற்­ப­டும்­போது வர­லாற்றில் ஒரு­போதும் நாம் எமது நண்­பர்­களைக் கைவிட்டுச் சென்­றது கிடை­யாது, இனி­யொ­ரு­போதும் அவ்­வாறு செய்­யவும் மாட்டோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

கட்டார், பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் வளை­குடா ஒத்­து­ழைப்பு நாடு­களின் அங்­கத்­த­வர்­க­ளுடன் 2014 ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையை மீறி­ய­தா­கவும் குற்­றம்­சாட்டி கடந்த 2017 ஜுன் மாதம் 05 ஆம் திகதி சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளை தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களை தடை செய்ததன.
கட்டார், இந்நான்கு நாடுகளினதும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.