உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் 13 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

0 1,536

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டையோர் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைதான 13 பேரை மீண்டும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கல்­முனை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

குறித்த வழக்கு கல்­முனை நீதி­மன்ற நீதி­பதி ஐ.என்.றிஸ்வான் முன்­னி­லையில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன் போது சந்­தேக நபர்கள் 7 பேரா­கவும் 6 பேரா­கவும் இரு வேறு சந்­தர்ப்­பங்­களில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.இவ்­வாறு விசா­ர­ணைக்­காக வந்த சந்­தேக நபர்கள் அனை­வரும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு மற்றும் பாது­காப்பு தரப்­பி­னர்­களால் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு பல மாதங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாவர்.

இவர்­க­ளுக்கு பிணை வழங்க பொலிஸார் ஆட்­சே­பனை வெளி­யிட்ட நிலையில் அனைத்து சந்­தேக நபர்­க­ளதும் விளக்­க­ம­றியல் மீண்டும் நீடிக்­கப்­பட்டு இவ்­வ­ழக்கு எதிர்­வரும் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இவ்­வாறு கைதான சந்­தேக நபர்கள் அனை­வரும் காத்­தான்­குடி, கல்­முனை,சாய்ந்­த­ம­ருது, சம்­மாந்­துறை உள்­ளிட்ட பகு­தி­களை சேர்ந்­த­வர்­க­ளாவர். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • பாறுக் ஷிஹான்

Leave A Reply

Your email address will not be published.