அரச ஹஜ் குழு பதவி விலகியது

0 961

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ புதிய அமைச்­ச­ர­வையை நியமித்துள்ளதையடுத்து முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அரச ஹஜ் குழு இரா­ஜி­னாமா செய்­துள்­ளது.

அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார். தங்­க­ளது பத­விக்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களைச் சிறப்­பான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அமைச்சின் செய­லாளர், பணிப்­பா­ளர்கள் மற்றும் உத்­தி­யோ­கத்­தர்கள், ஹஜ் முக­வர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் உட்­பட உத்­தி­யோ­கத்­தர்கள் அனை­வ­ருக்கும் அரச ஹஜ் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.