அக்குறணை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு (பி.எம்.ஜே.டி.) ஆகியன இணைந்து ஆட்சியமைத்துள்ளன. இதற்கமைய அக்குறணை பிரதேச சபையின் தவிசாளராக பி.எம்.ஜே.டி. உறுப்பினர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
42 வயதேயான இவர், சிறு வயதிலேயே தொழில்முயற்சியில் ஈடுபட்டு இன்று உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக வர்த்தகங்களை முன்னெடுக்கும் ‘மூன் லங்கா’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் விளங்குகிறார்.
இந் நிலையில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பிலும் மேற்படி மூன்று தரப்புகளும் இணைந்து ஆட்சியமைத்தமை குறித்தும் அவர் ‘விடிவெள்ளி’க்கு வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.